பைக் விலையில் புதிய கார்… இந்திய சாலைகளை ஆக்கிரமிக்கப்போகும் டாடா நானோ.. என்னென்ன வசதிகள் தெரியுமா?

By John A

Published:

வாழ்க்கையில் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தினரின் பெருங்கனவாக இருப்பது ஒன்று சொந்த வீடு. அடுத்தபடியாக கார் வாங்குவது. இன்றைய சூழ்நிலையில் குறைந்த முன்பணம் கட்டி இ.எம்.ஐ-ல் கார் வாங்குவது என்பது மிக எளிதானதாக மாறிவிட்டது. மேலும் நடுத்தர வர்க்கத்தினரும் கார் வாங்கும் ஆசையை பூர்த்தி செய்தது டாடாவின் பட்ஜெட் காரான நானோ.

ரத்தன் டாடாவின் கனவினை நனவாக்கும் பொருட்டு கடந்த 2008-ம் ஆண்டு 1லட்சம் ரூபாய்க்கு கார் அறிமுகப்படுத்தப்பட்டது. உலக கார் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நானோ கார் இந்திய சாலைகளை ஆக்கிரமித்தது. எனினும் சில குறைபாடுகளைக் கொண்டிருந்ததால் அது எதிர்பார்த்த விற்பனை இலக்கினை அடையவில்லை. எனினும் இந்தக் கார் மக்களின் வாகனம் என்று அழைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் ரத்தன் டாடா வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். எனினும் அவரது கனவினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொருட்டு டாடா நானோ காரின் அடுத்த அப்டேட் வெர்ஷன் கார் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த நானோ கார்களைப் போல் அல்லாமல் முற்றிலும் புதிய டிசைன்களுடன், அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் நானோ கார் மீண்டும் தனது விற்பனையைத் துவக்க உள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக கேரள அரசு உருவாக்கியுள்ள பயண வழிகாட்டி “சுவாமி சாட்போட் – Swami Chatbot”

முந்தைய நானோ காரில் இருந்த அனைத்து குறைபாடுகளும் களையப்பட்டுள்ளது. மேலும் நிறைந்த இட வசதியுடன் நான்கு பேர் பயணம் திருப்தியான செய்யும் வகையில் நானோ கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதி நவீன ஆடியோ சிஸ்டம், பவர்புல் ஹெட் லைட்டுகள் கொண்டுள்ளது. 624 சிசி குதிரைத் திறன் கொண்ட இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால் மணிக்கு 105 கிலோமீட்டர் வேகம் வரை இதில் பயணிக்கலாம். மேலும் நகர்புற சாலைகளுக்கான ஒப்பற்ற வாகனமாக திகழப் போகும் நானோ காரில் மைலேஜ் லிட்டருக்கு சுமார் 30 கி.மீ. வரை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுமட்டுமன்றி முதல் முறை கார் வாங்க நினைக்கும் அனைவருக்கும் பைக் விலையில் நானோ கார் வர உள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ. 2.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது ராயல் என்பீல்டு, கே.டி.எம். போன்ற உயர் ரக பைக்குகளின் விலையே ரூ. 2லட்சத்திற்கு மேல் இருப்பதால் பைக் வாங்கும் பணத்திற்கு நானோ கார் விற்பனை செய்யப் பட உள்ளது. இந்திய சாலைகளை மீண்டும் நானோ கார் ஆக்கிரமிக்கப்போகும் என்பதில் சந்தேகமேயில்லை.