அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், மீட்டிங்கின் போது குறிப்பு எடுக்க நோட்புக் பயன்படுத்துவார்கள் என்பது தெரிந்தது.
இந்த நிலையில், ஐதராபாத் சேர்ந்த ஒரு நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நோட்புக்கில் ஒரே பேப்பரில் மீண்டும் மீண்டும் 100 முறைக்கு மேல் அழித்து அழித்து எழுதலாம் என்பதுதான் ஆச்சரியமாகும்.
ஏஐ டெக்னாலஜியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நோட்புக்கில் உள்ள தொழில்நுட்பம், கையால் எழுதப்பட்ட உரையை டிஜிட்டலாக மாற்றும் சிறப்பினைக் கொண்டுள்ளது. இதன் மூலம், கையால் எழுதப்பட்ட உரைகளை மீண்டும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மிகவும் எளிதாக டிஜிட்டலாக மாற்றி அதை சேமிக்கவும் முடியும்.
அது மட்டுமின்றி, கிளவுட் மற்றும் பல்வேறு சாதனங்களிலும் அதை இணைக்க முடியும். மேலும், தகவல்களை விரைவாக வரிசைப்படுத்தி கண்டுபிடிக்கவும் முடியும்.
இந்த நோட்புக்கில் உள்ள ஒவ்வொரு பக்கத்திலும் 100 முறை மீண்டும் மீண்டும் அழுத்து எழுதக்கூடிய வகையில் இருப்பதால், காகித கழிவுகளை அதிக அளவில் குறைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் நோட்புக்கை “ரிநோட் ஏஐ” (ReNote AI) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த “ரிநோட் ஏஐ” என்ற புதிய நோட்புக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த நோட்புக் தனித்தன்மையுடன் இயங்குவதால், பெரும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.