வளர்ந்து வரும் நவீன காலகட்டத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு OnePlus நிறுவனம் பல்வேறு இயர்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
அதன் படி, வயர்டு ஹெட்போன்களின் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்போன் OnePlus Nord wired என்று அழைக்கப்படுகிறது. இதில் OnePlus Nord Wired டிவைஸ் 0.42cc சவுண்ட் கேவிட்டிகளை கொண்டுள்ளது.
அதோடு 9.2mm டைனமிக் உடன் ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூப் அம்சத்துடன் IPX4 சான்றிதலும் உடன் வருகிறது. அதே போல் பவர் பட்டன், மியூசிக் பிளேபேக், பாஸ் மற்றும் ரெஸ்யூம் பட்டன் போற்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
இத்தகைய சிறப்பம்சம் கொண்ட இயர்போன் அதிக விலை என பலரும் நினைப்பார்கள். ஆனால், இந்தியாவில் ரூ.2299 விலையில் சந்தைகளில் விற்பனையாகும் என நிறுவனம் கூறியுள்ளது.