பங்குச்சந்தையை கூட கணிக்கும் புதிய AI அறிமுகம்.. DeepSeekஐ பின்னுக்கு தள்ளுமா சீனாவின் Monica AI?

  சீனாவின் AI DeepSeek அறிமுகமானவுடன் சாட்ஜிபிடி உள்பட AI துறையே ஆட்டங்கண்டன் நிலையில் தற்போது சீனாவின் மற்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனமான Monica, தனது செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜென்ட் Manus-ஐ அறிமுகம் செய்துள்ளது.…

manus

 

சீனாவின் AI DeepSeek அறிமுகமானவுடன் சாட்ஜிபிடி உள்பட AI துறையே ஆட்டங்கண்டன் நிலையில் தற்போது சீனாவின் மற்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனமான Monica, தனது செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜென்ட் Manus-ஐ அறிமுகம் செய்துள்ளது. DeepSeek போலவே, Manus உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருப்பதாகவும், சில ஊடகங்கள் இதை “மற்றொரு DeepSeek என்று அழைக்க தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Manus AIயில் என்ன புதுமை உள்ளது என்று பார்த்தோம் என்றால் இந்த AI ஏஜென்ட் சிந்திக்கவும், திட்டமிடவும், வேலைகளை தனித்து செயல்படுத்தவும் முடியும். இது முழுமையான முடிவுகளை வழங்கக்கூடிய திறனை வெளிப்படுத்தியுள்ளதாக இதனை பயன்படுத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.

Manus AI வெளியூர், வெளிநாட்டு பயணத்திட்டங்களை வடிவமைப்பது, பங்குச் சந்தை ஆய்வுகளை செய்வது, பள்ளி ஆசிரியர்களுக்கான பாடத்திட்டங்களை உருவாக்குவது, பல்வேறு காப்பீட்டு திட்டங்களை ஆய்வு செய்வது போன்ற பல செயல்களைச் செய்யும் திறன் கொண்டது. எனவே இந்த AI, OpenAI-யின் DeepResearch-ஐ முறியடிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Manus கடந்த புதன்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் டெமோ வீடியோவை பகிர்ந்த நிலையில் அடுத்த நாளே இந்த வீடியோவை 2 லட்சத்திற்கு மேலானவர்கள் பார்த்துள்ளனர். இந்த AI நிச்சயம் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.