Vivo X Fold 3, 3 Pro எப்படி இருக்கு… வாங்க பார்க்கலாம்…

By Meena

Published:

Vivo தனது மூன்றாம் தலைமுறை Vivo X மடிப்பைப் கொண்ட ஸ்மார்ட் போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த X Fold ஸ்மார்ட் போன்கள் ஸ்டாண்டர்டு மற்றும் ப்ரோ வேரியண்ட்களில் வந்துள்ளது. அதற்கு Vivo X Fold 3 மற்றும் Vivo X Fold 3 Pro என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்விரு ஸ்மார்ட் போன்கள் சில விஷயங்களில் ஒத்துப்போகிறது, வேறு சில விஷயங்களில் வேறுபட்டும் இருக்கின்றன.

கடந்த ஆண்டு வெளியான X Fold 2 வின் முன்னோடியாக இந்த X Fold 3 சீரீஸ் அமைந்துள்ளது. இந்த X fold 3 மற்றும் X Fold 3 Pro ஆகிய இரண்டும் OLED டிஸ்பிலேயை கொண்டிருக்கிறது. வெளிப்புறத் திரை 6.53 அங்குலங்கள், 2,480×2,000 பிக்சல்கள் கொண்டிருக்கிறது, அதேசமயம் இன்டெர்னல் டிஸ்பிலே 8.03 அங்குலங்கள் மற்றும் 2,748×1,172 பிக்சல்கள் கொண்டிருக்கிறது.

இவ்விரண்டு திரைகளும் LTPO 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 4500 nits உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.x Fold 3 Pro ஒரு ஒருங்கிணைந்த அல்ட்ரா சோனிக் கைரேகை ஸ்கேனருடன் பொருத்தப்பட்டுள்ளது, இதற்கிடையில் X Fold 3 பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஸ்கேனரை கொண்டுள்ளது.

vivo x fold சீரிஸ் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. இரண்டு ஃபோன்களிலும் உள்ள அமைப்பு 50 MP ov50H OIS இயக்கப்பட்ட பிரதான சென்சார் மற்றும் 50 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Vivo X Fold 3 Pro snapdragon 8 gen processor ஐயும், Vivo X Fold 3 பழைய snapdragon 8 gen 2 சிப்பை கொண்டிருக்கிறது.

இரண்டு ஸ்மார்ட் போன்களும் 16GB LPDDR5 RAM மற்றும் 1TB UFS 4.0 ஸ்டோரேஜை கொண்டிருக்கிறது. Vivo X Fold 3 5,500 mAh உடன் 80W பாஸ்ட் சார்ஜிங்கும், Vivo X Fold 3 ப்ரோ 5,700 mAh உடன் 100W பாஸ்ட் சார்ஜிங் திறனை உள்ளடக்கியுள்ளது. Vivo X Fold series ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் வயர்லெஸ் லாஸ்லெஸ் ஹைஃபை ஆடியோ உள்ளது, இணைப்பு விருப்பங்களில் வைஃபை 7, டூயல் சிம் 5ஜி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் என்எப்சி ஆகியவை அடங்கும்.விரைவில் இந்த ஸ்மார்ட் போன்கள் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. Vivo X Fold 3 யின் விலை 92,100 ரூபாயும், Vivo X Fold 3 Pro 1,15,100 ரூபாயும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...