தேடுபொறியை முன்னிலைப்படுத்த சட்ட விரோதமாக செயல்பட்ட கூகுள்.. அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..

By John A

Published:

இன்று இணைய உலகின் மிகப்பெரிய ஜாம்வானாகத் திகழ்கிறது கூகுள் நிறுவனம். இண்டெர்நெட் என்றாலே இயல்பாகவே கூகுள் என்று சொல்லும் அளவிற்கு தனது தேடுபொறியை உருவாக்கி வைத்திருக்கிறது கூகுள் நிறுவனம். சாதாரணமாக நாம் ஏதாவது இணையத்தில் தேடச் சென்றால் வேகமாக நம் கைகள் செல்வது கூகுள் தேடுபொறியை நோக்கித்தான். இவ்வாறு இணைய உலகின் அசுரான விளங்கும் கூகுளுக்கு அமெரிக்க நீதிமன்றம் செக் வைத்திருக்கிறது.

இணைய உலகில் Bing, Opera, Yahoo, Mozilla, Safari, UC Brower என பலவகையான தேடுபொறிகள் எனப்படும் பிரௌசர்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே புகழ்பெற்றதாக இருக்கின்றன. ஆனால் உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் தேடுபொறியே அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

மூளையில் சிப்.. கம்ப்யூட்டருடன் இணைப்பு.. இனி செல்போனே தேவையில்லை.. எலான் மஸ்க்..!

தற்போது இதற்குத் தான் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவில் கூகுள் நிறுவனம் தேடு பொறியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக ஆண்டுக்கு சுமார் 82,000 கோடி ரூபாய் செலவழிப்பதாக டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் இருக்கும் போது வழக்குத் தொடரப்பட்டது. கூகுள் நிறுகூனம் 90% தேடுபொறியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக பெரிய பெரிய ஸ்மார்ட்போன், லேப்டாப், இணையசேவை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதிக அளவில் பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் அரசின் குற்றங்களுக்கு கூகுள் நிறுவனம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கூகுள் குரோமின் தரம் காரணமாகவே அதனை பயன்படுத்துகின்றனர் எனவும் வாதிடப்பட்டது. கடந்த ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் தற்போது கூகுளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் கூகுள் தனது பிரௌசரை ‘டிபால்ட்’ ஆக நிறுவுவதற்கு கோடிக்கணக்கான பணம் அள்ளிக் கொடுத்துள்ளதை உறுதி செய்துள்ளது. மேலும் 90% இணைய உலாவியை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைக்க சட்டவிரோதமாக கூகுள் நிறுவனம் செயல்பட்டுள்ளதையும் உறுதி செய்திருக்கிறது நீதிமன்றம்.

மேலும் உங்களுக்காக...