மழலை மாணவி சொன்ன பதிலால் குபீரென சிரித்த அன்பில் மகேஷ்.. அப்படி என்ன கேட்டிருப்பாரு?

Published:

தென்காசி : தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சென்று அங்குள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறார். அரசுப் பள்ளிகளின் தரம், மாணவர்களின் கற்றல் செயல்பாடு, ஆசிரியர்களின் குறை நிறைகள் போன்றவை குறித்தும் கேட்டறிந்து வருகிறார்.

இதுவரை 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் அன்பில் மகேஷ். அந்த வகையில் இன்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள ஓர் அரசுப் பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தொடக்கக் கல்வி பயின்று வரும் மழலை மாணவியிடம் உன் பெயர் என்று கேட்ட பின், அந்த மழலை மாணவியிடம் “ABCD சொல்லுங்க..” என்று கேட்டார்.

தேடுபொறியை முன்னிலைப்படுத்த சட்ட விரோதமாக செயல்பட்ட கூகுள்.. அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..

அப்போது அந்த மாணவி சற்றே தயக்கத்துடன் மேஜைக்கு அடியில் சென்று ஒளிந்து கொள்ள விடாத அன்பில் மகேஷ் மீண்டும் “ABCD சொல்லுங்க..” என்று கேட்க, அந்தக் குழந்தை அது நோட்புக்ல இருக்கு என்று பதில் கொடுத்தார். இதனைக் கேட்டதும் அமைச்சர் அன்பில் மகேஷ் கலகலவென சிரித்தார்.

அதன்பின் அந்தக் குழந்தையை வாழ்த்தி விட்டு அடுத்த வகுப்பறைக்குச் சென்றார். மேலும் நூலகங்கள், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.

மேலும் உங்களுக்காக...