Google Searchல் உங்கள் பெயர், போன் நம்பர், முகவரி உள்ளிட்டவற்றை யாராவது தேடினார்களா என்பதை கண்டுபிடிக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எப்போதாவது கூகுளில் சென்று உங்களது பெயரையே போட்டு நீங்கள் தேடிப் பார்த்ததுண்டா? நீங்கள் தேடவில்லை என்றாலும், யாராவது உங்களை தேடிப் பார்த்தார்களா என்பதை அறிந்து கொள்ள முயற்சித்தது உண்டா? அதற்கான வசதி இப்போது வந்துள்ளது.
Results About You என்று ஒரு சிறப்பு கருவியை Google அறிமுகம் செய்துள்ளது. இது இணையத்தில் உங்கள் தனிப்பட்ட தன்மையை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகவும், இந்த அம்சம் Google-ல் உங்கள் பெயர், தொலைபேசி எண், வீட்டு முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தானாகவே தேடி கண்டுபிடித்து, அவற்றை நீக்கும் வசதியை செய்து தருகிறது.
இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் தேடிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. Results About You என்ற கருவியில் ஒரு முறை பதிவு செய்துவிட்டால், Google உங்கள் பெயருக்கான தேடல் முடிவுகளை தொடர்ந்து கண்காணிக்கிறது.
உங்கள் தகவல்களை யாராவது தேடினால், அதை உடனே உங்களுக்கு எச்சரிக்கையாக தகவல் அளிக்கும். தனிப்பட்ட தகவல்களை நீக்கும் செயல்முறையும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் தகவலுடன் ஏதேனும் உங்கள் தனிப்பட்ட தகவல் தோன்றினால், அதில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அதை நீக்க முடியும்.
இதன் மூலம், உங்கள் பெயர் மற்றும் உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை யாரும் அறிந்து கொள்ளாதவாறு செய்ய முடியும். உங்கள் பெயர் அல்லது முகவரி உட்பட, உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாராவது Google Searchல் தேடினால், அவர்களுக்கு எந்த வகையான தகவலும் கிடைக்காதது செய்யும் வகையில் இது செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.