5 ஆண்டுகளாக சரி செய்ய முடியாத தாடை பிரச்சனை.. 60 வினாடிகளில் குணப்படுத்திய ChatGPT

  5 ஆண்டுகளாக குணப்படுத்த முடியாத தாடை பிரச்சனையை, ChatGPT 60 வினாடிகளில் குணப்படுத்தி விட்டதாக, ரெடிட் பயனர் ஒருவர் சமூக பல தளத்தில் பதிவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ChatGPT தற்போது மருத்துவத்துறையிலும்…

 

5 ஆண்டுகளாக குணப்படுத்த முடியாத தாடை பிரச்சனையை, ChatGPT 60 வினாடிகளில் குணப்படுத்தி விட்டதாக, ரெடிட் பயனர் ஒருவர் சமூக பல தளத்தில் பதிவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ChatGPT தற்போது மருத்துவத்துறையிலும் நுழைந்துவிட்டது என்பதும், மருத்துவர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத சில சிக்கலான நோயின் அறிகுறியை கண்டுபிடித்து குணப்படுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், சமீபத்தில் ஒருவர் தனக்கு ஐந்து ஆண்டுகளாக இருந்த தாடை பிரச்சனையை பல மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நிலையில், ChatGPT அதை 60 வினாடிகளில் தீர்த்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு பாக்ஸிங் போட்டியில் கலந்து கொண்ட போது தாடையில் அடிபட்டதால், தனக்கு பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதை அடுத்து பல மருத்துவர்களுடன் காண்பித்து எம்ஆர்ஐ ஸ்கேன் உள்பட பல்வேறு சோதனை செய்தும், சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் ChatGPT இடம் இது பற்றி கேட்டபோது, அனைத்து விவரங்களையும் அளித்த பின்னர், மூக்கு எலும்பில் பிரச்சனை இருப்பதாகவும், அது இன்னும் நகரக்கூடியதாக இருப்பதால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தீர்வு கூறியது என்றும், அதன்படி செய்தேன். உடனடியாக சரியாகிவிட்டது. ஐந்து ஆண்டுகளாக இருந்த பிரச்சனை 60 வினாடிகளில் தீர்ந்து விட்டது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் சிகிச்சையின் முழு விவரத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயனரின் பதிவுக்கு ஏராளமான ஒரு கமெண்ட் செய்துள்ளனர். “எனக்கும் இது போன்ற ஒரு பிரச்சனை இருந்தது. காது, மூக்கு, தொண்டை மருத்துவரை சந்தித்தேன், ஆனால் ChatGPTயிடம் தான் தீர்வு கிடைத்தது” என்று கூறினார். இன்னொருவர், “எனக்கு பல ஆண்டுகளாக தூக்கம் வராத பிரச்சனை இருந்தது. ChatGPT 15 நிமிடங்கள் மட்டும் சாட் செய்தேன், எனக்கு தற்போது நன்றாக தூக்கம் வருகிறது” என்று கூறியுள்ளார்.

வருங்காலத்தில், டாக்டர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவைபடாது என ஏற்கனவே பில்கேட்ஸ் கணித்த நிலையில், இப்போது டாக்டர்கள் செய்யும் பல வேலைகளை, ChatGPT செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.