நான் எத்தனை மணிக்கு லஞ்ச் சாப்பிட வேண்டும்? கூகுள் Gemini அமைத்து தரும் அட்டவணை..!

  கூகுள் நிறுவனத்தின் Gemini என்ற ஏஐ தொழில்நுட்பம் பல ஆச்சரியமான முடிவுகளை தந்து கொண்டிருக்கும் நிலையில் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது அப்டேட்டுகளை தந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கூகுள் காலண்டருடன் Gemini-ஐ…

google calender

 

கூகுள் நிறுவனத்தின் Gemini என்ற ஏஐ தொழில்நுட்பம் பல ஆச்சரியமான முடிவுகளை தந்து கொண்டிருக்கும் நிலையில் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது அப்டேட்டுகளை தந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கூகுள் காலண்டருடன் Gemini-ஐ இணைக்கலாம் என்று அறிவிப்பு அனைவருக்கும்
ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை தற்போது பார்ப்போம்.

கூகுள் காலண்டர் விண்டோவின் மேல் வலதுபுறத்தில் உள்ள “Ask Gemini” என்ற ஐக்கானைக் கிளிக் செய்து அதில் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்களை தேர்வு செய்ய செய்தும், தன்னிச்சையாகவும் கேள்விகளை கேட்கலாம்.

குறிப்பாக நான் லஞ்ச் எப்போது சாப்பிட வேண்டும்? எனது அடுத்த மீட்டிங் எங்கே? எப்போது? என கேள்வி கேட்கலாம். மேலும் “More suggestions” என்பதை தேர்வு செய்து பயனர்கள் தங்களின் சொந்த கேள்விகளை எழுப்பலாம்:

திங்கட்கிழமை எனக்கு எத்தனை கூட்டங்கள் உள்ளன? ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் காலை 6 மணிக்கு ஒரு வாராந்திர உடற்பயிற்சி நிகழ்வை சேர்க்கவும் பயன்படுத்தலாம்.

இந்த புதிய அம்சம் உங்கள் கூகுள் காலண்டரில் உள்ள விஷயங்களை இனி மவுசால் கிளிக் செய்து கையால் தேட வேண்டிய தேவையை குறைக்கும். Gemini-ன் உரையாடல் திறன்களைப் பயன்படுத்தி வேலைகளை வேகமாக முடிக்க இது உதவுகிறது.

இந்த புதிய அம்சம் அனைத்து பயனர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.