கண்கள் மூடியிருந்தாலும் பார்க்க முடியும்.. சீனா கண்டுபிடித்த இன்ஃப்ராரெட் லென்ஸ்..!

சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பில் கான்டாக்ட் லென்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில் இரவில் கண்ணுக்கு தெரியாததை பார்க்க ஜாஸ் மற்றும் நைட் விஷன் கண்ணாடிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இவை…

lens

சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பில் கான்டாக்ட் லென்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் திரைப்படங்களில் இரவில் கண்ணுக்கு தெரியாததை பார்க்க ஜாஸ் மற்றும் நைட் விஷன் கண்ணாடிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இவை அதைவிட மேம்பட்டவை. இந்த புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணிந்தால், ஒருவர் கண்களை மூடியிருந்தாலும் காண்பது சாத்தியம்!

‘அப் கன்வெர்ஷன்’ தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் லென்ஸ்கள் இந்த கண்ணாடியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஃப்ராரெட் என்பது மனித கண்களுக்கு தெரியாத அளவிற்கு நீளமான ஒளிக்கதிர். வழக்கமாக, இந்த ஒளியை பார்வையாக மாற்ற, ஒரு சக்தி மிகுந்த கருவி தேவைப்படும். ஆனால், இப்போது விஞ்ஞானிகள் எந்தவித மின் சக்தியும் தேவையில்லாமல், கண்களை மூடினாலும் இந்த ஒளியை காணக்கூடிய வகையில் லென்ஸ்கள் உருவாக்கியுள்ளனர். காரணம், இன்ஃப்ராரெட் ஒளி பிப்பைகளை ஊடுருவி செல்லும் திறன் கொண்டது.

இதன் முக்கிய அம்சங்கள்

• உயர் திறனுள்ள இன்ஃப்ராரெட் மாற்றும் தெளிவான UCL (Upconversion Contact Lens) லென்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

•இந்த UCL-களை அணிவதன் மூலம் இன்ஃப்ராரெட் நேரம் மற்றும் இட பரிமாணங்களை உணரும் திறனைப் பெற்றுள்ளனர்.

• மூன்று நிறங்கள் கொண்ட டிரைக்கிரோமாடிக் UCL-கள் மூலம் மனிதர்கள் இன்ஃப்ராரெட் வண்ணங்களை பார்க்க முடிகிறது.

• மனிதர்கள், இந்த டிரைக்கிரோமாடிக் UCL-களை அணிவதன் மூலம் படங்களில் இருக்கும் வெவ்வேறு இன்ஃப்ராரெட் கதிர் வரிசைகளையும் பிரித்தறிய முடிகிறது.

மனிதக் கண்கள் இயற்கையாகவே இன்ஃப்ராரெட் ஒளியை உணர இயலாது. இது, ஒளிக்கதிர்களை உணரும் புரதமான ஓப்சின்களின் வெப்ப இயக்க சித்தாந்தங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், இன்ஃப்ராரெட் ஒளியை நேரடியாக சாதாரண கண்களால் காண இயல்பாக்கும் திறன் இந்த கண்ணாடியில் இருக்கும்.

இந்த UCL-களை அணிந்த எலிகள், இன்ஃப்ராரெட் நேர மற்றும் இட தகவல்களை உணர்ந்து, தங்கள் நடத்தைகளை அதன்படி மாற்ற முடிந்தது. அதன்பின் மனிதர்கள் இந்த UCL-களை அணிந்தபின், இன்ஃப்ராரெட் ஒளியில் இருக்கும் நேரம் மற்றும் இட விவரங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக, நாம் உருவாக்கியுள்ள டிரைக்கிரோமாடிக் UCLs மூலமாக, பல இன்ஃப்ராரெட் ஒளிக்கதிர் வரிசைகளை மனிதர்கள் பிரித்தறிந்து, மூன்று அடிப்படை நிறங்களை போன்று இன்ஃப்ராரெட் வண்ணத்தை காண முடிகிறது.

இந்த ஆராய்ச்சி, மனிதர்களுக்கான ‘non-invasive’ இன்ஃப்ராரெட் பார்வையை வழங்கும் புதிய வாய்ப்புகளைத் திறந்து வைத்துள்ளது. இது மனிதனின் அடுத்த தலைமுறைக்கான புதிய கண்டுபிடிப்பாக பார்க்க முடிகிறது.