12 நாடுகளில் ஐபோன்களில் ChatGPT செயலி.. இந்திய பயனர்களுக்கு சப்போர்ட் செய்யுமா?

By Bala Siva

Published:

ChatGPT என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பதும் இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். எவ்வளவு பெரிய கஷ்டமான பணியாக இருந்தாலும் ChatGPT அதை எளிமையாக செய்து விடுவதால் மிக எளிமையாக வேலையும் முடிந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொழில்நுட்பத்டஹி தற்போது உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐபோன்களிலும் தற்போது ChatGPT தொழில்நுட்பம் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் முதல்கட்டமாக 12 நாடுகளில் மட்டுமே ஐபோனில் ChatGPT செயல்படும் என்றும் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த 12 நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

iphone151

ஐபோன்களுக்கான ChatGPT பயன்பாடு கிடைக்கும் 12 நாடுகளின் பட்டியல் இதோ:

* ஆஸ்திரேலியா
* கனடா
* பிரான்ஸ்
* ஜெர்மனி
* இந்தியா
* அயர்லாந்து
* இத்தாலி
* ஜப்பான்
* மெக்சிகோ
* ஸ்பெயின்
* ஐக்கிய இராச்சியம்
* அமெரிக்கா

இந்த தொழில்நுட்பம் முதலில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள சில நாடுகளுக்கு வெளியிடப்பட்டு டவுன்லோடு செய்ய அனுமதிக்கப்பட்டது. மேலும் ஐபோனில் இந்த தொழில்நுட்பத்டஹி இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர் சேவை, கல்வி மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவின் திறனை ஆராய விரும்பும் அனைவருக்கும் ChatGPT பயன்பாடு ஒரு மதிப்புமிக்க தொழில்நுட்பம் ஆகும்.

ChatGPT பயன்பாட்டை விரும்பும் ஐபோன் பயனர்கள் அதை ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். பயன்பாடு பதிவிறக்கம் செய்து பயன்படுத்த இலவசம். ஆனால் கூடுதல் அம்சங்களை வழங்கும் பிரீமியம் சந்தா என்ற ஆப்ஷனும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...