ஆப்பிள் வாட்சை இனி ஐபோன், லேப்டாப்பிலும் இணைக்கலாம்.. விரைவில் புதிய வசதி..!

By Bala Siva

Published:

உலகம் முழுவதும் ஆப்பிள் வாட்ச் சாதனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்பதும் இந்த சாதனம் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுவதால் பலர் இதை வாங்கி உபயோகித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஆப்பிள் வாட்சில் தற்போது பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என்பதும் குறிப்பாக ஆப்பிள் வாட்ச் பயனாளிகளின் உடல்நலம் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளிவரும் என்பதும் இதய துடிப்பு, மாரடைப்பு உள்பட பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஆப்பிள் வாட்ச் பயனாளிகள் ஆப்பிள் ஐபோன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களுடன் இணைக்கும் அம்சமும் விரைவில் வரவிறுப்பதாக கூறப்படுகிறது. ஒரு ஆப்பிள் வாட்சை ஆப்பிள் ஐபோன் உடன் இணைக்கும் வசதி மட்டும் வந்துவிட்டால் ஆப்பிள் வாட்ச் பயனாளிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதை குறிப்பிடத்தக்கது. இதற்கான முயற்சி நடைபெற்று வருவதாகவும் மென்பொருள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் மட்டுமே அதாவது ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் லேப்டாப்பில் மட்டுமே இணைக்க முடியும் என்றும் இந்த வசதி விரைவில் வர இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த மென்பொருள் கிட்டத்தட்ட தயாராகி விட்டதாகவும் ஆப்பிள் வாட்சின் அடுத்த கட்ட பதிவில் இந்த வசதியுடன் சேர்ந்து வரும் என்றும் ஏற்கனவே ஆப்பிள் வாட்ச் வாங்கியவர்கள் இந்த மென்பொருளை டவுன்லோடு செய்து கொள்வதன் மூலம் அந்த வசதியை பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆப்பிள் வாட்ச், ஐபோன் உள்பட பல சாதனங்களில் இணைக்கும் கனவு நனவாகிவிடும். வளர்ந்து வரும் போட்டி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பயனாளிகளுக்கு புதுப்புது அம்சங்களை தர வேண்டிய கட்டாயத்தில் அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளது என்பதும் அதனை அதன் காரணமாக ஆப்பிள் வாட்ச் இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.