ஆப்பிள் ஐபோன் பயனர்களை குறிவைத்து, ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வந்தது போல் போலி மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன. அந்த மெசேஜ்களை கண்டும் காணாமல் விடுவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு அழைத்தால், உங்கள் வங்கி கணக்கு காலியாகும் அபாயம் இருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்கள் Apple ID-ல் இருந்து நீங்கள் ஒரு பொருள் வாங்கியதாக தெரிவித்தும், உங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த மெசேஜ்கள் இருக்கும். குறிப்பாக, அந்த மெசேஜில் காணப்படும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள சொல்லப்பட்டிருந்தால், அந்த எண்ணிற்கு அழைக்க வேண்டாம். ஒருவேளை நீங்கள் அழைத்தவுடன், மோசடிக்காரர்களுக்கு உங்கள் தகவல்களை திருட வழிவகுக்கும்.
மோசடியில் மாட்டாமல் இருப்பதற்கான வழிகள் இதோ:
உண்மையில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனை நடந்ததா என சந்தேகம் இருந்தால், உங்கள் வங்கி செயலி அல்லது Apple ID-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள purchase history பகுதியை நேரடியாக பாருங்கள்.
போலியான மெசேஜை spam ஆக குறித்துவைத்து, Apple அல்லது உங்கள் நாட்டின் சைபர் பாதுகாப்பு அமைப்புகளிடம் புகார் செய்யுங்கள்.
மோசடிக்காரர்கள் பொதுவாக முடிக்கப்படாத தொலைபேசி எண்களில் இருந்து மெசேஜ்களை அனுப்புவார்கள். இதைப் பாதுகாப்பாகத் தடுக்கலாம். ஆனால், service number மூலம் வந்திருந்தால், அவர்கள் முறையாக செயல்படும் அமைப்பை தவறாக பயன்படுத்தலாம். இது நடந்தால், உடனடியாக புகார் செய்யுங்கள்.
Phishing மோசடிக்காரர்கள் மிகவும் சாமர்த்தியமாக மாறி வருகின்றனர். ஆனால் ஒரு முக்கியமான விதி எப்போதும் அப்படியே இருக்கும். உங்களின் தனிப்பட்ட அல்லது வங்கி தொடர்பான தகவல்களை கேட்டால் உடனே உஷாராகி விடுங்கள்.