கோயில் பூசாரின்னா தட்டில் கையேந்துபவர் என நினைத்தாயா? ரூ.200 கோடியில் ரிசார்ட் கட்டும் பூசாரி..!

  பூசாரி என்றால் தட்டில்  விழும் பணம் தான் வருமானம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பூரி ஜெகநாதர் கோயிலின் பூசாரி ஒருவர் 200 கோடி ரூபாய் மதிப்பில் ரிசார்ட் கட்ட இருப்பதாக கூறப்படுவது…

puri

 

பூசாரி என்றால் தட்டில்  விழும் பணம் தான் வருமானம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பூரி ஜெகநாதர் கோயிலின் பூசாரி ஒருவர் 200 கோடி ரூபாய் மதிப்பில் ரிசார்ட் கட்ட இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகநாதர் கோயிலில் பல வருடங்களாக பூசாரியாக இருக்கும் ஒருவர், ஒரு சொகுசு ரிசார்ட்டை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் சுத்த சைவ உணவுடன் ஆன்மீக மையமாக உருவாக்கப்படும் என்றும், இது பக்தர்களுக்கு சாத்வீக அனுபவத்தை தரும் என்றும் கூறப்படுகிறது.

200 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் இது வெறும் சுற்றுலா தளமாக இல்லாமல், கடல் பக்கத்தில் இருக்கும் புனித தலமாகவும், தெய்வீக தரிசனம் பெரும் இடமாகவும் அமைய உள்ளது. அமைதி, ஆன்மீகம், சொகுசு வசதி என அனைத்து அனுபவங்களையும் வழங்கும் ஒரு ரிசார்ட் ஆக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜெகநாதம் என்ற பெயரில் உருவாகும் இந்த திட்டத்தின் கட்டுமான மதிப்பு மட்டும் 110 கோடி ரூபாய் என்றும், இது 7 ஏக்கர் நிலத்தில் அமைய உள்ள நிலையில், அந்த நிலம் அந்த பூசாரிக்கு சொந்தமானது என்பதால் அதன் மதிப்பு கணக்கிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2026 ஆம் ஆண்டு ரத யாத்திரைக்கு முன்பாகவே இந்த ரிசார்ட் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்றும், ஆன்மீக சுற்றுலாவாக இதை உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்த பூசாரியின் எண்ணமாக உள்ளது.

மேலும், இந்த ரிசார்ட்டை கட்டுவதற்கு 5000 உறுப்பினர்களை சேர்க்க உள்ளதாகவும், உறுப்பினர்களின் பங்கு தொகையாக 3 இலட்சம் முதல் 7 லட்சம் வரை இருக்கும் என்றும் தெரிகிறது.

இதில் உறுப்பினராக சேருபவர்கள் ஒவ்வொரு மாதமும் ஐந்து நாள் இலவசமாக தங்கிக் கொள்ளலாம், மேலும் அவர்களுக்கு இந்த சலுகை ஐந்து வருடங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்டுடியோ, ஸ்பா, தியேட்டர், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தும் இதில் இடம் பெற உள்ளன. பூரி ஜெகநாதன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு ஆன்மீக சுற்றுலாவை அனுபவிக்க கூடியதாக இது உருவாகும்.