ஆப்பிள் ஐபோன் 16e விலை ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14-ஐ விட  விலை குறைவா? எப்படி?

ஆப்பிள் ஐபோன் 16e என்பது ஆப்பிள் இண்டலிஜென்ஸ் வசதி கொண்ட மிகக் குறைந்த விலை ஐபோன் ஆகும். இதில் Dynamic Island, Ultra-Wide லென்ஸ், MagSafe சார்ஜிங் போன்ற சில  அம்சங்கள் இல்லை என்றாலும்,…

iphone 16e
ஆப்பிள் ஐபோன் 16e என்பது ஆப்பிள் இண்டலிஜென்ஸ் வசதி கொண்ட மிகக் குறைந்த விலை ஐபோன் ஆகும். இதில் Dynamic Island, Ultra-Wide லென்ஸ், MagSafe சார்ஜிங் போன்ற சில  அம்சங்கள் இல்லை என்றாலும், ஐபோனுக்காக ஆப்பிள் வழங்கும் மிக சக்திவாய்ந்த A18 Bionic சிப்செட்டுடன் வருகிறது.  மேலும் 2x zoom திறன் கொண்ட புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட 48MP பிரதான கேமரா அமைப்பும் இதில் உள்ளது.ஆப்பிள் ஐபோன் 16e வாங்குபவர்களுக்கு ₹4,000 வங்கித் தள்ளுபடி கிடைக்கும். இதனால், iPhone 16e-ன் விலை இப்போது  iPhone 15 மற்றும் iPhone 14-ஐ விட மலிவாக கிடைக்கிறது.

iPhone 16e தள்ளுபடி விவரங்கள்

ஆப்பிள் ஐபோன் 16e-ன் ஆரம்ப விலை ரூ.59,900. பிக் பாஸ்கெட்டில் இது ரூ.2,500 தள்ளுபடி பெற்றுள்ளதால், புதிய விலை ரூ.57,400 ஆக இருக்கிறது.

கூடுதலாக, HDFC கிரெடிட் கார்டில் ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம், iPhone 16e-ஐ ரூ.53,400 என வாங்க முடியும், இது இதுவரை காணப்பட்ட மிகக் குறைந்த விலையாகும்.

ஆப்பிள் ஐபோன் 16e-ஐ பழைய ஐபோன்களை விட ஏன் வாங்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலாக ஆப்பிள் இண்டலிஜென்ஸ் அம்சம் இருக்கிறது என்பதுதன சரியான பதிலாகும்.  ஆனால், AI அம்சங்களில் நீங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என்றாலும், A18 Bionic சிப்செட் இந்த போனில் உள்ளது, இது iPhones-க்குள் மிக சக்தி வாய்ந்ததாகும்.

மேலும், புதிய iOS அப்டேட் உடன் வருகிறது, மற்றும் பழைய iPhone மாடல்களை விட நீண்ட கால மென்பொருள் ஆதரவை பெறும். எனவே புதிய மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன், குறைந்த விலைக்கு ஆப்பிள் ஐபோன் 16e வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும்!