செயற்கை நுண்ணறிவின் மூலம் பல நடிகைகளையும் காவாலா பாடலுக்கு நடனம் ஆட வைத்த AI தொழில்நுட்ப கலைஞர்!

Published:

அண்ணாத்த படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தான் ஜெயிலர். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ஜாக்கி ஷெரப், யோகி பாபு, விநாயகன், சரவணன் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அனிருத் ரவிச்சந்திரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

images 4 16

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக இருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையிடப்பட உள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதி, ஷில்பா ராவ் பாடிய காவாலா என்ற பாடல் வெளியானது. ஜூலை 6 ஆம் தேதி வெளியான இந்தப் பாடல் 40 மில்லியன் பார்வைகளை தாண்டி உள்ளது.

images 4 14

சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்கள். தமன்னா நடனமாடி பட்டித்தொட்டி எங்கும் ஹிட் ஆன இந்த பாடலுக்கு சிம்ரன் நடனம் ஆடுவதைப் போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வந்தது.

65ee4e256a 1

இது தமன்னா காவாலா பாட்டிற்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ ஆகும். இதனை செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்து செந்தில் நாயகம் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கலைஞர் வெளியிட்டுள்ளார். சிம்ரன் மட்டும் இல்லாமல் நயன்தாரா, சமந்தா, கத்ரீனா கைஃப், கைரா அத்வானி மாளவிகா மோகன், காஜல் அகர்வால் என பல நடிகைகள் நடனம் ஆடுவதைப் போல எடிட் செய்திருந்தார். இந்த வீடியோக்கள் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கலைஞர் செந்தில் நாயகம் பேட்டி ஒன்றில் இந்த வீடியோவினை பார்த்த சிம்ரன், தமன்னா ஆகியோர் பாராட்டு தெரிவித்து இருப்பதாக கூறியிருந்தார். மேலும் AI தொழில்நுட்பம் வைத்து நடிகர்கள் இல்லாமல் முழு படத்தையும் இயக்குவது தன் இலக்கு என்றும் குறிப்பிட்டு இருந்தார். AI தொழில்நுட்பத்தைக் கொண்டு மறைந்த நடிகர்களின் நடிப்பையும் மறைந்த பாடகர்களின் குரலையும்  மீட்டெடுக்கும் முயற்சியில் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...