உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான X வலைதள பக்கம் சமீபத்தில் திடீரென முடக்கப்பட்ட நிலையில் அதன் பயனர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது X பக்கத்தை அடுத்து இன்னொரு முக்கிய சமூக வலைதளமான Snapchat திடீரென முடங்கியுள்ளது. இதனால் இதன் பயனாளர்கள் சிக்கலில் உள்ளனர்.
இந்த நிலையில் Snapchat பொருத்தவரை தற்காலிகமாக செயல் இழந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதே நேரத்தில் C14A என்ற error தோன்றினால் அதனை சரி செய்ய வாய்ப்புள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
சமீபத்திய பயன்பாடுகளில் இருந்து Snapchat பக்கத்தை மூடிவிட்டு, மறுபடியும் திறக்கவும். பிறகு, மீண்டும் லாகின் செய்து error தொடர்கிறதா எனச் சரிபார்க்கவும்.
மீண்டும் error இருந்தால் உங்கள் கம்யூட்டரை ரீஸ்டார்ட் அல்லது ஷட் டவுன் செய்து மீண்டும் கம்ப்யூட்டரை ஆன் செய்யவும். இப்போது மீண்டும் Snapchatஐ ஓப்பன் செய்து பார்க்கவும்.
இன்னும் சரியாகவில்லை என்றால் Wi-Fi இண்டர்நெட்டில் இருந்து மொபைல் தரவுக்கு டேட்டாவு மாற்றவும். VPN பயன்படுத்தினால், அதை தற்காலிகமாக முடக்கவும்.
இன்னும் சரியாகவில்லை என்றால் Snapchat-ஐ Update செய்யவும். கூகுள் பிளே ஸ்டோர் சென்று “Update” என்ற ஆப்சன் இருந்தால், அதைத் தேர்வு செய்யவும். “Open” என்று இருந்தால், உங்கள் பயன்பாடு ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்பின் மீண்டும் லாகின் சென்று பார்க்கலாம்
இப்போதும் சரியாகவில்லை என்றால் Snapchat-ன் Cache-ஐ டெலிட் செய்யவும். அதற்கு Settings > Apps > Snapchat > Storage > Clear Cache என செய்யவும். இன்னும் பிரச்சனை தீரவில்லை என்றால் Snapchat App-ஐ Reinstall செய்ய வேண்டும்
மேலே உள்ள முறைகள் C14A பிரச்சனையை சரிசெய்யவில்லை என்றால் Snapchat அதிகாரப்பூர்வ சப்போர்ட் உதவியை தொடர்புகொள்ளலாம்.