நான் சொல்றதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்..! மதுரை மாநாட்டில் கூட்டணி கட்சி பெயரை அறிவிக்கிறாரா விஜய்? கூட்டணிக்கு வரும் முதல் கட்சி எது?

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான மாநாட்டில் விஜய் தனது கூட்டணி கட்சிகளின் பெயரை அறிவிக்க இருப்பதாக தொண்டர் வட்டாரங்கள் கூறிவருவது…

vijay tvk

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான மாநாட்டில் விஜய் தனது கூட்டணி கட்சிகளின் பெயரை அறிவிக்க இருப்பதாக தொண்டர் வட்டாரங்கள் கூறிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, விக்கிரவாண்டியில் மிகவும் பிரம்மாண்டமான ஒரு மாநாட்டை நடத்திக் காட்டினார் என்பதும், கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர், தற்போது மதுரையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் செய்து வருகிறார்கள்.

முதல் மாநாட்டை விட இந்த மாநாடு இரண்டு மடங்கு பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு வரும் நிலையில், இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் இணையும் இரண்டு கட்சிகளின் அறிவிப்பை விஜய் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. அந்த இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அந்த இரண்டு கட்சிகள் என்னவாக இருக்கும் என்று அதிமுக, திமுக வட்டாரங்கள் மத்தியில் சஸ்பென்ஸ் ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் கூட்டணி தலைமை மீது அதிருப்தி இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசியதால் திமுக மீது காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறது. தங்களுடைய அரசியல் குரு என்று கருதப்படும் காமராஜரையே இழிவாக பேசிவிட்டதாக வெளிப்படையாகவே காங்கிரஸ் தலைவர்கள் திருச்சி சிவாவையும் திமுகவையும் விமர்சனம் செய்து வருகிறது. குறிப்பாக, திருச்சி வேலுச்சாமி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருவது இரு கட்சிகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கிட்டத்தட்ட விலகுவது உறுதியாகிவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாட்டில் தங்களது முதல் கூட்டணி கட்சியாக காங்கிரஸ் கட்சியின் பெயரை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், இரண்டாவது கட்சியாக தேமுதிக அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரை விஜய் அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தேமுதிக ஒருபக்கம் திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தினாலும், அதிகபட்சமாக நான்கு தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணியில் கிடைக்காது என்றும், ஆனால் தேமுதிகம் விஜய் கூட்டணிக்கு வந்தால் 10 முதல் 15 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, தேமுதிக விஜய் தலைமையிலான கூட்டணிக்கும் பரிசீலித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தை கட்சியும் விலகிவிடும் என்றும், எனவே விஜய் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேரவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில், இப்போது இருக்கும் அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் என்ன முடிவு ஆனாலும் எடுக்கும் என்ற நிலைதான் உள்ளது என்றும், தமிழக அரசியலைப் பொறுத்தவரை 2026 ஆம் தேர்தல் என்பது சம அளவிலான மும்முனை போட்டியாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த மும்முனை போட்டியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் – இந்த மூவரில் யாருக்கு வெற்றி கிடைக்கும், யாரை மக்கள் அரியணைகளில் அமத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.