வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல், இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக்கூறி வருகின்றனர். இந்த சூழலில், ஒரு முன்னணி பத்திரிகையாளர் முதல் முறையாக, தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக, ஒரு பக்கம் ஏற்கனவே வலிமையான கூட்டணியில் உள்ளது. அதே நேரத்தில், அதிமுக இன்னொரு பக்கம் வலிமையான கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியில் வெற்றியும் பெறும் என்றே கூறப்படுகிறது.
இந்த இரு பெரிய கூட்டணிகளும் வலிமையாக இருந்தாலும், களத்தில் முதல் முறையாக இறங்கும் நடிகர் விஜய், பல்வேறு திட்டங்களுடன் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் ஆதரவு அவருக்கு இருப்பதால், மிகப்பெரிய அளவில் ஓட்டு சதவீதம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
சில அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், விஜய்யின் கட்சி 25 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், முதன்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவானால், விஜய்யின் ஆதரவு இன்றி திமுகவோ அல்லது அதிமுகவோ ஆட்சி அமைக்க முடியாது என்றும், அப்போது விஜய் முன்வைக்கும் பேரம் இரு கட்சிகளையும் அதிர வைக்கும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் முதன்முறையாக, தொங்கு சட்டசபை ஏற்படுமா? திமுக அல்லது அதிமுக கூட்டணிக்கு விஜய் ஆதரவு அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து காண வேண்டியதுதான்.