தவெக மாநாடு : பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம்.. கூடவே அந்த பட்டியலும் ரெடி.. விஜய் பேச போகும் விஷயங்கள் இதுதான்..

By Ajith V

Published:

vijay speech in tvk maanadu : நடிகர் விஜய் எப்போது தனது சினிமா பயணத்தை முடித்துவிட்டு அரசியல் கட்சியை தொடங்கப் போகிறேன் என அறிவித்தாரோ அன்று முதல் இன்று வரை பரபரப்பாக தான் அதை சுற்றி பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது இருக்கும் தமிழ் நடிகர்களில் கோடிகணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருந்தார்.

இதில் உடனடியாக உறுப்பினர்களாக தமிழகத்தில் உள்ள மக்கள் இணைய 2026 ஆம் ஆண்டு தேர்தலை தான் சந்திக்க உள்ளதையும் உறுதிப்படுத்தி இருந்தார். வெறுமென ஒரு அரசியல் என்ட்ரியாக மட்டுமில்லாமல் நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு தனது அறிக்கையும் வெளியிட்டு கவனம் ஈர்த்து வந்தார் விஜய். அப்படி ஒரு சூழலில் தான் தற்போது விக்கிரவாண்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக முதல் மாநாட்டை விஜய் நடத்தவுள்ளார். இன்னும் கொஞ்ச நேரத்தில் விஜய் பேச ஆரம்பிக்க உள்ள நிலையில் அந்த இடமே ஸ்தம்பித்து போயுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு மத்தியில் நடிகர் விஜய் சில கட்டளைகளை குறிப்பிட, ரசிகர்கள் கேட்காமல் மாநாடு நடக்கும் இடத்தில் மிக மோசமாக நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இன்னொரு பக்கம் சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை அந்த இடமே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து போக பலரும் தாங்கள் வந்த வாகனங்களில் இருந்து வெளியே வர முடியாத சூழலும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து ஊடகங்களிலும் தற்போது தலைப்புச் செய்தியாக தவெக தலைவர் விஜய்யின் மாநாடு தொடர்பான செய்திகள் தான் இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் நடிகர் விஜய் தனது முதல் கட்சி மாநாட்டில் எது பற்றி பேச போகிறார் என்பது தொடர்பான சில தகவல்கள் அதிகம் கவனம் பெற்று வருகிறது.

தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளை குறித்து நடிகர் விஜய் ஏதாவது பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிகிறது. இது தொடர்பாக வெளியான தகவலில் பெண் விடுதலை, பெண்கள் அதிகாரத்துக்கு வர வேண்டியது தொடர்பான கருத்துக்களையும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அதே நேரத்தில் மதவாதத்திற்கு எதிரான கருத்துகளையும் இந்த மாநாட்டில் விஜய் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

அம்பேத்கர் கருத்துக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மற்றும் தேவை உள்ளிட்ட விஷயங்களையும் விஜய் இந்த மாநாட்டில் பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் எந்த தலைவரை தாக்கியோ அவர்களை எதிர்த்தோ இந்த மாநாட்டில் விஜய் பேச மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தாண்டி ஊழல் பற்றிய கருத்துக்களையும், ஊழல்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாணவர்கள், இளைஞர்களின் பொதுநலன் பற்றியும் விஜய் பேசுவார் என்று சொல்லப்பட்டு வருகிறது.