சமீபத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் சந்தித்து கொண்டதற்குப் பிறகுதான் சீமானின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் உடன் இருந்ததும் சந்தேகத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
சீமான் நேரடியாக திமுக பக்கம் செல்ல மாட்டார் என்பது உறுதி என்றாலும், திமுக சீமானை தங்கள் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது. உண்மையில், நடிகர் விஜய்யை பார்த்து திமுக தலைமை அச்சப்படுகிறது என்றே அரசியல் வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். விஜய் ஒரு மிகப்பெரிய மக்கள் சக்தியாக உருவெடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான், திமுக என்ன செய்வதென்று தெரியாமல் தற்போது சீமானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
திடீரென விஜய்யை சீமான் தனது எதிரியாக கருதுவதும், விஜய்க்கு எதிரான “போர்” என்று சீமான் அறிவிப்பதும், சீமான்-ஸ்டாலின் சந்திப்பின்போதுதான் ஏதோ ஒரு ஒப்பந்தம் நடந்திருக்கிறது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இருப்பினும், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் வேறு விதமாக கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள், சீமானை ஒரு பொருட்டாகவே விஜய் நினைக்கவில்லை என்றும், அவர் சொல்வதை எதையும் விஜய் கணக்கில் எடுத்துக்கொள்ள போவதில்லை என்றும் கூறுகின்றனர். சீமானுடைய குற்றச்சாட்டுகளுக்கும், அவருடைய விமர்சனங்களுக்கும் விஜய் பதிலளிக்க போவதில்லை என்றும், அவருடைய இலக்கு திமுகதான் என்றும் தெரிவிக்கின்றனர்.
“ஒரு மிகப்பெரிய இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், சீமான் போன்ற சின்ன சின்ன விஷயங்களில் விஜய் கவனம் செலுத்த மாட்டார்,” என்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
