விஜய்க்கு தமிழகத்தில் சுமார் 1 கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.. இவர்களது வாக்கு மொத்தமாக கிடைத்தாலே 25% வந்துவிடும்.. திராவிட எதிர்ப்பாளர்கள், ஆளும் கட்சியின் அதிருப்தியாளர்கள் ஓட்டுக்கள் கிடைத்தால் தவெக ஆட்சி அமைக்கலாம்.. ஆனாலும் இன்றைய நிலையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. கூட்டணி உடைந்தால் மட்டுமே ஆட்சியை இழக்கும்..!

2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கப் போகும் முக்கிய அரசியல் மற்றும் கட்டமைப்பு சார்ந்த அம்சங்கள் குறித்து விரிவான பகுப்பாய்வை அரசியல் விமர்சகர்கள், கருத்து கணிப்பு நடத்தும் நிறுவனங்கள் நடத்தி…

vijay 3

2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கப் போகும் முக்கிய அரசியல் மற்றும் கட்டமைப்பு சார்ந்த அம்சங்கள் குறித்து விரிவான பகுப்பாய்வை அரசியல் விமர்சகர்கள், கருத்து கணிப்பு நடத்தும் நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களது கணிப்புப்படி, கூட்டணி பலத்தின் அடிப்படையில் தற்போது தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அ.தி.மு.க. ஒரு அமைப்புரீதியான பலவீனத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், மேலும், கட்சியின் மீது உள்ள அதிருப்தியாளர்கள் கட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவு என்றும் கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கியப் புள்ளி, விஜய்யின் தாக்கம் தான் என்று கணிக்கப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் அவர் ஒரு “ஜோக்கர் இன் தி பேக்” (Joker in the Pack) போல செயல்பட போகிறார் என்றும், அவரது புதிய கட்சியான த.வெ.க.வின் வருகை மற்ற பிரதான கட்சிகளின் வாக்கு வங்கிகளை பிரித்து, ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளையும் மாற்றி அமைக்கும் சக்தியாக மாறும் என்றும் கணித்துள்ளனர்.

விஜய்யின் ரசிகர்கள் சுமார் 18% முதல் 22% வரையிலான வாக்குகளை வைத்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பலமாக இருந்தாலும், இந்த கணிசமான வாக்குகளை சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றியாக மாற்றுவது என்பது த.வெ.க.வுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். ஒரு புதிய கட்சியாக இருப்பதால், த.வெ.க.வின் கட்டமைப்பு இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்றும், இது வாக்குகளை சீட் வெற்றியாக மாற்றுவதில் ஒரு தடையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வாக்குகளை சீட் வெற்றியாக மாற்ற தான் செங்கோட்டையன் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் உள்பட ஒருசில கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற வாய்ப்பு உண்டு என்றும் கூறப்படுகிறது.

விஜய்யின் ரசிகர்களில் 93 லட்சம் முதல் 1.14 கோடி பேர் வரை வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருக்கலாம் என்று ஒரு மதிப்பீட்டை வழங்கிய கணிப்பாளர்கள், இருப்பினும், கட்சிக் கட்டமைப்பு பலவீனமாக இருப்பது சவால்தான் என்பதையும் வலியுறுத்திகின்றனர். ஒட்டுமொத்தமாக, 2026 தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சியை பிடிக்க முடியாமல் போனால் அதற்கு காரணம் தவெகவாக தான் இருக்கும்.

இறுதியாக, தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் பிற முக்கிய காரணங்களில் ஒன்று மக்கள் செல்வாக்குள்ள மற்றும் அறியப்பட்ட முகங்களை வேட்பாளர்களாக அடையாளம் கண்டு தேர்தலில் நிறுத்துவது, கட்சிக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன், பூத் நிர்வாகம் மற்றும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்றும் கணித்துள்ளனர்.