விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் அந்த கட்சியை தனித்து போட்டுயிடுமா? அல்லது முக்கிய கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்ற கேள்வி தான் தற்போது பலரது மனதில் எழுந்துள்ளது.
அனேகமாக தவெக அதிமுகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமியும் அதை தான் விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் டெல்லியில் இருந்து ஏற்படும் நெருக்கடி காரணமாக அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டும் என்ற சூழல் ஏற்படும்போது அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டால் விஜய் அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பே இல்லை என்ற நிலையில் அடுத்தகட்டமாக தனித்து போட்டியிடும் முடிவை அவர் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இளைஞர்களின் முழு ஆதரவு, புதிய வாக்காளர்களின் ஆதரவு மற்றும் திமுக அரசின் அதிருப்தியாளர்கள் என ஒரு பெரிய கூட்டமே புதிதாக வருபவர்களுக்கு ஓட்டு போட காத்திருக்கும் நிலையில் அதனை சரியாக பயன்படுத்தினால் ஆட்சியைப் பிடித்து விடலாம் அல்லது குறைந்த பட்டம் எதிர்க்கட்சி யாவது ஆகிவிடலாம் என்பது தான் விஜய்க்கு தற்போது சொல்லப்பட்டு வரும் ஆலோசனையாக கூறப்படுகிறது.
திமுக மாதிரியே அதிமுகவும் பல்வேறு ஊழல்கள் செய்திருக்கும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் ஊழல் கரை படிந்த கட்சியுடன் தான் கூட்டணி என விமர்சனம் செய்ய வாய்ப்பு ஆகிவிடும் என்றும் எனவே தனித்து போட்டியிட்டு ரிஸ்க் எடுப்பதுதான் சரியானதாக இருக்கும் என்றும் பிரசாந்த் கிஷோர் மற்றும் ஆதவ் அர்ஜுன், விஜய்க்கு ஆலோசனை கூறி வருவதாக தெரிகிறது.
திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறும் போது கண்டிப்பாக திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது உண்மைதான் என்றும் ஆனால் அதே நேரத்தில் பாஜக – அதிமுக கூட்டணி ஏற்பட்டால் அந்த கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்றும் இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் எதிர்க்கட்சி ஆகிவிட்டால் அதன் பிறகு 2031 ஆம் ஆண்டு கண்டிப்பாக ஆட்சியை பிடித்து விடலாம் என்றும் விஜய்க்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளன.
இதனை அடுத்து விஜய் கூட்டணி என்ற முடிவை எடுப்பாரா? தனித்து போட்டி என்ற ரிஸ்க் எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.