தமிழகத்தில் மீண்டும் அதிமுக கூட்டணியில் பாஜக இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் இந்த கூட்டணியில் சேர மாட்டார் என்பதால், நான்கு முனை போட்டி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமான் தனித்து போட்டி, மற்றும் விஜய் தனித்து போட்டி என நான்கு முனை போட்டிகளில் திமுகவுக்கு தான் அதிக லாபம் இருக்கும் என்று பரவலாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுகவுக்கு எதிரான ஓட்டு மூன்றாக பிரியும் போது, திமுக மிக எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று திட்டம் போட்ட விஜய், பிரசாந்த் கிஷோர் மற்றும் ஆதவ் அர்ஜூனா, திமுக, அதிமுக இரண்டையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் எப்போதும் ஒரு கும்பல் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், வேறு வழியில்லாமல் தான் இந்த இரண்டு கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், யாராவது ஒருவர் இந்த இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்பவர் வரமாட்டாரா? என்ற ஏக்கத்தில் இருக்கும் நிலையில், விஜய் அந்த ஏக்கத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இனி வரும் நாட்களில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் மாறி மாறி வெளுத்து கட்டப் போவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு தரப்பின் மீது அதிருப்தியில் இருக்கும் வாக்குகள் மொத்தமாக தனக்கு கிடைக்கும் என்று அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை தனித்து போட்டியிட்ட சீமான், இனிமேலும் தனித்து போட்டியிட்டால் வழக்கம்போல் டெபாசிட் கிடைக்காது என்பதால், அவர் அதிமுக கூட்டணிக்கு மாற வாய்ப்பு இருப்பதாகவும், அது மட்டும் நடந்து விட்டால் விஜய்க்கு கூடுதல் அதிர்ஷ்டம் என்றும் கூறப்படுகிறது.
தனக்கு எதிராக உள்ள அனைவரையும் விமர்சனம் செய்தால், அனைவருக்கும் எதிரான ஓட்டுகள் தனக்கு வரும் என்று விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் இந்த ராஜதந்திரம் தேர்தலில் எடுபடுமா? இப்போதுள்ள அரசியல் கட்சிகள் மீது வெறுப்பில் இருக்கும் மக்கள் விஜய்க்கு ஓட்டு போடுவார்களா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!