தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அடுத்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய்யும் கலந்து கொள்வார் என்றும், அவர் கலந்து கொண்டால் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து, தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி காவல் துறையில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் காவல்துறை இதற்கு அனுமதி வழங்கும் என கூறப்படுகிறது.
ஒருவேளை அனுமதி வழங்காவிட்டால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் விஜய்யும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், விஜய்யை கைது செய்து பதற்ற நிலையை உருவாக்க திமுக அரசு முயற்சிக்காது என்றும், ஆர்ப்பாட்டத்தை சுமுகமாக நடத்தி முடிக்க காவல்துறை ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ஆர்ப்பாட்ட நாளில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.