பவன் கல்யாணையும் விஜய்யையும் ஒப்பிடுவதே தவறு.. பவன் கல்யாண் கூட்டணியோடு போட்டி போட்டார்.. விஜய் தனியாக போட்டி போட்டார்.. ஜெகன்மோகன் ரெட்டியை வேண்டுமானால் விஜய்யுடன் ஒப்பிடலாம்.. இருவரும் கிட்டத்தட்ட ஒரே ஸ்டைலில் அரசியல் செய்கின்றனர், காக்கி பேண்ட், வெள்ளை சட்டை உள்பட.. ஜெகன்மோகன் போல் விஜய்யும் தனித்து ஆட்சி அமைப்பாரா?

யார் ஜெயிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் ஒரு பக்கம் அனல் பறக்க, “பவன் கல்யாண் வழியில் விஜய்யின் அரசியல் நகர்வுகள் இருக்குமா?” என்ற விவாதத்தை சில விமர்சனங்கள் ஆழமாக அலசுகிறது.…

vijay pawan kalyan

யார் ஜெயிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் ஒரு பக்கம் அனல் பறக்க, “பவன் கல்யாண் வழியில் விஜய்யின் அரசியல் நகர்வுகள் இருக்குமா?” என்ற விவாதத்தை சில விமர்சனங்கள் ஆழமாக அலசுகிறது.

ஆந்திர அரசியலில் பவன் கல்யாண் மேற்கொண்ட தேர்தல் வியூகங்கள் மற்றும் அவர் பெற்ற வெற்றிக்கும், தற்போது தமிழக அரசியலில் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகளை மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால் விஜய்யின் அரசியல் பயணம் நடிகர் பவன் கல்யாணை அப்படியே ‘காப்பி-பேஸ்ட்’ செய்வதாக சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் தான் கிடைத்துள்ளது.

ஆந்திராவில் பவன் கல்யாண் தொடக்கத்தில் தனித்து போட்டியிட்டபோது ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் பிறகே அவர் கூட்டணி கணக்குகளைச் சரியாக போட்டு, தற்போது துணை முதலமைச்சர் என்ற நிலையை எட்டியுள்ளார். ஆனால், நடிகர் விஜய்யை பொறுத்தவரை, அவர் தனித்து போட்டியிட்டாலும் கண்டிப்பாக பவன் கல்யாண் அளவுக்கு ஜீரோவாக மாட்டார். பவன் கல்யாணின் தேர்தல் பரப்புரை முறைகள் மற்றும் ரசிகர்களை வாக்கு வங்கியாக மாற்றிய விதம் போன்ற சில அம்சங்களை விஜய் பின்பற்றினாலும், அரசியல் ரீதியாக விஜய் முற்றிலும் மாறுபட்ட ஒரு களத்தில் பயணிப்பதாக தெரிகிறது. குறிப்பாக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்தே பவன் கல்யாண் தன் வெற்றியை உறுதி செய்தார் என்பதை குறிப்பிட வேண்டும்.

விஜய்யின் அரசியல் நகர்வுகள் உண்மையில் பவன் கல்யாணை காட்டிலும், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பாணியை அதிகம் ஒத்திருப்பதாக ஒரு புதிய கோணத்தை சிலர் முன்வைக்கின்றனர். ஜெகன் மோகன் ரெட்டி எப்படி தனித்து நின்று ஒரு மிகப்பெரிய அலையை உருவாக்கி ஆட்சியை பிடித்தாரோ, அதே போன்ற ஒரு வியூகத்தை விஜய் கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு செல்லும் விதம், மக்கள் மத்தியில் தன்னை வெளிப்படுத்தும் முறை போன்றவற்றில் ஜெகன் மோகன் ரெட்டியின் தாக்கம் விஜய்யிடம் தென்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது வெறும் ரசிகர்களுக்கான கவர்ச்சி மட்டுமல்லாமல், ஒரு முறையான அரசியல் திட்டமிடல் என்பதை இது காட்டுகிறது.

சமூக வலைத்தளங்களில் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் இத்தகைய ஒப்பீடுகள் பெரிய அளவில் பேசப்படுகின்றன. பவன் கல்யாண் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய இருவரின் அரசியல் வெற்றிகளுமே வெவ்வேறு சூழல்களை கொண்டவை. விஜய் இதில் எந்த பாதையை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதுதான் தமிழகத்தின் 2026 தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கப் போகிறது. ஒரு பக்கம் திராவிட கட்சிகளின் வலுவான கோட்டை, மறுபக்கம் விஜய்யின் அரசியல் வரவு என தமிழக அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த ஒப்பீடுகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன.

இறுதியாக, அரசியலில் திரை கவர்ச்சி என்பது ஒரு நுழைவுச்சீட்டு மட்டுமே; அதனை தாண்டித் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கு வலுவான பூத் கமிட்டி மற்றும் அரசியல் கூட்டணிகள் அவசியம். பவன் கல்யாண் தன் தோல்விகளில் இருந்து பாடம் கற்று கொண்டு கூட்டணி மூலம் சாதித்தார். விஜய் தனித்து நின்று ஜெகன் மோகன் ரெட்டியை போல சாதிப்பாரா அல்லது பவன் கல்யாண் போல பிற்காலத்தில் கூட்டணியை நாடுவாரா என்பது தற்போதைக்கு ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. எவ்வாறாயினும், தமிழக அரசியலில் விஜய்யின் வருகை ஒரு “அக்னி அலையை” உருவாக்கி இருப்பது மட்டும் நிதர்சனம்.