சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களின் வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் தரத்தை பரிசோதனை செய்யும் சேவையை தொடங்கியுள்ளது. குடிநீரின் தரம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நீர் மாதிரியையும், புதிய வெண்மை நிற பிளாஸ்டிக் கேனில், கீழ் கண்ட அளவுடன் எடுத்து வர வேண்டும். குடிநீர்ப் பரிசோதனைக்கு 2 லிட்டர் தண்ணீரும், கட்டிட வேலைகளுக்கான பரிசோதனைக்கு 5 லிட்டர் தண்ணீரும் மாதிரிகளாக ஏற்றுக்கொள்ளப்படும்.
குடிப்பதற்குப் பயன்படும் தண்ணீருக்கு சோதனை கட்டணம் ரூ.75. குடியிருப்பு / வணிக பயன்பாட்டுக்கான தண்ணீருக்கு சோதனை கட்டணம் ரூ.200. கட்டிடம் கட்டுவதற்கான தண்ணீருக்கு சோதனை கட்டணம் ரூ.200.
பணம் செலுத்தும் நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை (வேலை நாட்களில் மட்டும்). பரிசோதனை டிவுகள் 15 நாட்களில் வழங்கப்படும்.
இந்தச் சேவையைப் பெற விரும்புபவர்கள், 15/18, வாட்டர் ஒர்க்ஸ் அவென்யூ, ஆஸ்பிரின் கார்டன் காலனி, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரியில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் நீர் மற்றும் கழிவுநீர் பரிசோதனை ஆய்வகத்திற்கு செல்லலாம்.
இந்த முயற்சி, குடிநீரின் தரம் குறித்த சந்தேகங்களைத் தீர்த்து, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

