புத்தம் புது பொலிவுடன் தமிழ் இணையதள நூலகம்.. 17கோடி பார்வைகளை கடந்து சாதனை.. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்..

புதிப்பிக்கப்பட்ட தமிழ் மின் நூலகம் 17கோடி பார்வைகளை கடந்து பயணம்செய்யும் தமிழ் மின் நூலகம் மேம்படுத்த தேடுதல், ஒளிப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்கங்களுடன் புதுப்பிக்கப்பட்டு, உலகத் தரமான நூலகமாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து…

library

புதிப்பிக்கப்பட்ட தமிழ் மின் நூலகம் 17கோடி பார்வைகளை கடந்து பயணம்செய்யும் தமிழ் மின் நூலகம் மேம்படுத்த தேடுதல், ஒளிப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்கங்களுடன் புதுப்பிக்கப்பட்டு, உலகத் தரமான நூலகமாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

எந்த ஒரு இனத்துக்கும், ஒரு சமூகத்துக்கும் வரலாறும், தொன்மை இலக்கியம், பொருட்கள், மொழி மிகவும் முக்கியமான அடையாளமாகத் திகழும். அந்த அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் இணைய வழி கல்விக்கழகம் என்று துவக்கப்பட்டு, இன்றைக்கு பல பணிகள் மேற்கொண்டு வருகிறோம். உலக அளவில் தமிழர்கள் எங்கே இருந்தாலும், அவர்களுடைய வரலாறு, அவர்களுடைய மொழி, அவர்களுடைய கலாச்சாரத்தை அணுகும் வகையில் இணையவழி நூலகம், ‘தமிழ் விர்ச்சுவல் லைப்ரரி’ என்ற நூலகத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

குறிப்பாக, 2021 ஆண்டு திமுக ஆட்சி முதல் பொறுப்பேற்றவுடன், இணையவழி நூலகத்துக்கு மிகவும் உற்சாகமும், விரிவாக்கமும் செய்ய வேண்டும் என்ற கருத்துடன், இலக்குடன் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு இன்றைக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக புதுப்பிக்கப்பட்ட வெப்சைட் இன்று தொடங்கி வைத்திருக்கிறோம். ஏற்கனவே இருந்த நூல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், வரலாற்றிலிருந்த தகவல்களைத் தாண்டி, மல்டிமீடியா அடிப்படையில், வீடியோ, மேப்ஸ், ஆடியோ இதெல்லாம் இணைக்கப்பட்டு, இன்றைக்கு மிகவும் ‘எக்ஸ்பாண்டட் லைப்ரரி’ ஆக, விரிவாக்கம் செய்யப்பட்ட லைப்ரரியாக இன்று தொடங்கி வைத்திருக்கிறோம்.

ஏற்கனவே இறுதி நான்கு ஆண்டுகளில், 2021-ல் சுமார் பதிவுகள், ஒன்றரைக் கோடி வியூஸ் இருந்த வெப்சைட் இன்றைக்கு 17 கோடி வரைக்கும் பலரால் பயன்படுத்தப்படும் வகையில் அதிகரிச்சு வந்திருக்கிற யூட்டிலைசேஷன் அடிப்படையில், இதை இன்னும் இந்த புத்தாக்கம் செய்த முயற்சிகளால், இது இன்னும் அதிகரிக்கும், வேகமாக அதிகரிக்கும் என்று கருதுகிறோம்.

உலக அளவில் நம் மொழியும், நம் கலாச்சாரமும், நம் வரலாறும் அழியாத வகையில் என்றைக்கும் நிலைநாட்டி நிற்கும் வகையில் இந்த இணைய நூலகம் மிக முக்கியமாக ஒரு பணி செய்கிறது. அதற்கு மாண்புமிகு முதலமைச்சருடைய அறிவுறுத்தலின்படி, இந்தத் துறையில் பணி செய்யும் அனைத்து அதிகாரிகளுக்கும் நான் என் வாழ்த்தையும், என் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு, உலகத்திலேயே இருக்கிறதுலேயே சிறந்த இணைய நூலகங்களில் இது ஏற்கனவே ஒன்றாக இருக்கிறது. இன்னும் இதேபோல் முன்மாதிரியாகப் பணி செய்து, விரிவாக்கம் செய்து இன்னும் சிறப்படையும் என்று வாழ்த்துகிறேன்.”