இனிமேல் மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது ரொம்ப ஈஸி.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு..

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO), பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், சிறுபான்மையின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், கல்வி கடன் திட்டங்களை வழங்குகிறது. அரசு அங்கீகரிக்கப்பட்ட…

loan

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO), பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், சிறுபான்மையின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், கல்வி கடன் திட்டங்களை வழங்குகிறது. அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழில் கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் மற்றும் பட்டப் படிப்புகளைப் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம்.

கடன் உதவிக்கான தகுதியான கட்டணங்கள்:

இந்த கல்வி கடன் திட்டத்தின் கீழ், மாணவர்கள் பின்வரும் கல்வி செலவினங்களுக்கு நிதி உதவி பெறலாம்:

சேர்க்கைக் கட்டணம் மற்றும் பயிற்றுவிப்புக் கட்டணம்

புத்தகம், எழுதுபொருட்கள், மற்றும் படிப்புக்குத் தேவையான உபகரணங்களுக்கான செலவுகள்

தேர்வுக் கட்டணங்கள்

விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு விடுதி மற்றும் உணவுக்கான கட்டணங்கள்

கல்வி கடன் திட்டங்கள் (திட்டம் 1 மற்றும் திட்டம் 2):
இந்தக் கல்வி கடன் இரண்டு முக்கிய திட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

திட்டம் 1:
வருமான வரம்பு: மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ₹3 லட்சம் வரை இருக்கலாம்.

தொழிற்கல்வி / வேலைவாய்ப்பு படிப்புக்கான கடன்: ஆண்டுக்கு ₹4 லட்சம் வீதம், அதிகபட்சமாக ₹20 லட்சம் வரை கடன் பெறலாம்.

வெளிநாட்டில் படிப்பதற்கான கடன்: ஆண்டுக்கு ₹6 லட்சம் வீதம், அதிகபட்சமாக ₹30 லட்சம் வரை கடன் பெறலாம்.

வட்டி விகிதம்: இந்த கடனுக்கு ஆண்டுக்கு 3% மட்டுமே வட்டி விதிக்கப்படும்.

திட்டம் 2:

வருமான வரம்பு: மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தொழிற்கல்வி / வேலைவாய்ப்பு படிப்புக்கான கடன்: ஆண்டுக்கு ₹4 லட்சம் வீதம், அதிகபட்சமாக ₹20 லட்சம் வரை கடன் பெறலாம்.

வெளிநாட்டில் படிப்பதற்கான கடன்: ஆண்டுக்கு ₹6 லட்சம் வீதம், அதிகபட்சமாக ₹30 லட்சம் வரை கடன் பெறலாம்.

வட்டி விகிதம்:

மாணவர்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டி

மாணவிகளுக்கு ஆண்டுக்கு 5% வட்டி

விண்ணப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள்:

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் பின்வரும் ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்:

சாதி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் அல்லது வழிபாட்டுத் தலத்தால் வழங்கப்பட்ட மத சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்று.

வருமானச் சான்றிதழ்

இருப்பிடச் சான்றிதழ்

ஆதார் சான்றிதழ்

உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate)

கல்விக் கட்டணம் செலுத்திய அசல் ரசீது / செலான்

மதிப்பெண் சான்றிதழ்

வங்கி கோரும் பிற ஆவணங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய இடங்கள்:

தகுதியுடைய மாணவர்கள் இந்த கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க, பின்வரும் அலுவலகங்கள் அல்லது வங்கிகளை அணுகலாம்:

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்

மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள்

நகர கூட்டுறவு வங்கி

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி

இந்தத் தகவலை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. தகுதியான மாணவ / மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் கல்வி தேவைகளை நிறைவேற்றி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.