மீண்டும் தனித்து போட்டி என சீமான் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டதால், அதிமுக-பாஜக கூட்டணியில் அவர் இணையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், தன்னுடைய தலைமையில் ஒரு கூட்டணி அமைக்க அவர் ஒப்புக்கொள்வார் என்றும், அந்த கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மற்றும் விசிக வெளியே வந்தால், அந்த கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை. அதனால், சீமான் மற்றும் விஜய் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ் மற்றும் விசிக என நான்கு கட்சிகள் இணைந்தால், அந்த கூட்டணி வலுவாக இருக்கும் என்றும், அதிமுக-திமுகவுக்கு சவாலாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மேலும், சீமான் முதலமைச்சர் வேட்பாளராகவும், விஜய் மற்றும் திருமாவளவன் துணை முதல்வர்கள் என, இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்றும், முதல் முறையாக தமிழகத்தில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பு சரியாக இருக்குமா? அல்லது மக்கள் நலக் கூட்டணி போல் புஸ் என ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.