திமுக கூட்டணி இதுவரை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக் கொண்டு இருப்பதற்கு ஒரே காரணம் வலுவான கூட்டணிதான் என்பதை தற்போது திமுகவுக்கு எதிரான கட்சிகள் புரிந்து கொண்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அதிமுக-பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டணியில் தேமுதிக, பாமக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவுக்கு எதிரான கொள்கைகளை உடைய அனைத்து கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஓரளவு வாக்குச் சதவீதத்தை வைத்துள்ள நாம் தமிழர் கட்சியும் திமுகவுக்கு எதிரான கட்சி என்பதால், தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்து பேசியதாகவும், அதிமுக கூட்டணியில் இணைவது குறித்தும் அதற்கான சில நிபந்தனைகளை அவர் விதித்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, திமுகவுக்கு எதிரான ஒட்டுமொத்த கட்சிகளும் இணைந்தால், அது திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில் விஜய்யின் கட்சிக்கு தான் கூட்டணியே இல்லை என்றும், அந்த கட்சி பரிதாபமாக தனித்து விட பட்டுள்ளதாகவும், 2021ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட நிலைமைதான் தற்போது விஜய்க்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.