சவுக்கு சங்கர் வழக்கில் திருப்பம். ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு தள்ளுபடி.. காரணமான அந்த ஒரு விஷயம்

சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனியார் யூடியூப்…

savukku shankar case and YouTuber Felix Gerald's bail petition rejected by madras hc this one reason

சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது நீதிமன்ற உத்தரவு காரணமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை, திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். பெலிக்ஸ் ஜெரால்டும் சவுக்கு சங்கர் போல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜாமீன் கோரி பெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த மனுவில், நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் பதியபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்கமாட்டேன் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என பெலிக்ஸ் ஜெரால்டு தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவில் வழக்கறிஞர், உள்நோக்கத்துடன் இந்த கேள்விகளை மனுதார் பெலிக்ஸ் ஜெரால்டு கேட்டதாகவும். காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உயர் அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்ட பேசியதாகவும் தொடர்ந்து இது போன்ற செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பெலிக்ஸ் ஜெரால்டு சவுக்கு சங்கரை தூண்டும் வகையில் செயல்பட்டார் என எனவே ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 47 நாட்களாக சிறையில் இருந்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட அந்த கருத்திற்கும் பெலிக்ஸ்க்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், இதற்காக அவர் மன்னிப்பு கோருவதாக கூறினார். மேலும் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும் இதுவரை 87 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது நீதிபதி சம்பந்தப்பட்ட இந்த கேள்விகளை எடிட் செய்திருக்கலாமே என்றார்.

இதனை அடுத்து உத்தரவிட்ட நீதிபதி தமிழ்செல்வி, வழக்கில் மனுதாரருடைய கேள்வி உள்நோக்கம் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது.ஒரு தவறான தகவல் கொண்ட பிரச்சினை துண்டும் வகையில் மனுதார் கேள்வி உள்ளது. மேலும் மனதார பெலிக்ஸ் ஜெரால்டு ஒரு பாமரர் அல்ல எனவும் அவர் நன்கு படித்தவர் எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது மனு தள்ளுபடி செய்யவதாக நீதிபதி உத்தரவிட்டார்.