மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பம்.. அன்புமணிக்கு அடித்த லக்.. பிரேமலதா அப்சேட்..!

வரும் ஜூலை மாதத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, தற்போதைய எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு நான்கு எம்பி பதவி கிடைப்பது உறுதி ஆகியுள்ளது. ஆனால், அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்…

mp

வரும் ஜூலை மாதத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, தற்போதைய எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுக கூட்டணிக்கு நான்கு எம்பி பதவி கிடைப்பது உறுதி ஆகியுள்ளது.

ஆனால், அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரிந்து சென்றுள்ளதால், ஒரு எம்பிக்கு மட்டுமே எம்எல்ஏக்கள் உள்ளனர். இரண்டாவது எம்பி வேண்டும் என்றால், இன்னும் ஆறு எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், அதிமுக ஆழ்ந்த யோசனையில் இருந்தது.

இந்த நிலையில், தங்களுக்கு ஒரு எம்பி பதவி வேண்டும் என தேமுதிக தரப்பிலிருந்து பிரேமலதா, அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், “எம்எல்ஏக்களின் ஆதரவை நான் வாங்கிக் கொள்கிறேன்” என பிரேமலதா கூறியும், எடப்பாடி பழனிச்சாமி அதற்கு உடன்படவில்லை.

இந்த நிலையில் தான், ஆட்டத்தில் அன்புமணி திடீரென புகுந்துள்ளார். தங்களிடம் ஆறு எம்எல்ஏக்கள் உள்ளனர், அதிமுக எம்எல்ஏக்களையும் சேர்த்தால், ஒரு எம்பி பதவி கிடைக்கும் என்றும், தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக ஆதரவு கொடுத்தால், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் கூட்டணியில் இணைவோம் என்றும் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டதாகவும், பாஜக, தேமுதிக, ஓபிஎஸ் ஆதரவு இல்லாமல், அன்புமணியை எம்பி ஆக்கிவிட்டால், 2026 தேர்தலிலும் அந்த கட்சி உதவும் என்ற கணக்கில் அவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே, அதிமுக சார்பில் இரண்டாவது எம்பியாக அன்புமணி தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பிரேமலதா கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், அதிமுக சார்பில் உள்ள ஒரு எம்பி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும், இதில் ஜெயக்குமாருக்கு பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது