டெல்லி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை மத்திய அரசு பாதியாக குறைத்துள்ளது.இதுவரையில் ரூ,18 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வீட்டு கடனில் வட்டி மானியம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 9 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வீடு கட்டினால் தான் வட்டி மானியம் கிடைக்கும்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: இந்த திட்டத்தின் படி, 75 சதவீதம், ஏழை மற்றும் பின்தங்கிய சமுதாயத்தினருக்கு வீடுகள் கட்ட மத்திய அரசு மானியம் தருகிறது. மத்திய அரசின் ‘ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் வீடு பெற விண்ணப்பிக்கலாம். சுமார் 2.95 கோடி நிரந்தர வீடுகளை கட்டித் தர அரசு விரும்புகிறது. இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது கிராமப்புறங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை (பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா- கிராமின்) 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் மேலும்2 கோடி வீடுகள் கட்ட மானியம் அளிக்கப்பட உள்ளது. இந்த மானியம் சமவெளிப் பகுதியில் பயனாளிகளுக்கு தலா ரூ.1.20 லட்சமும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ரூ.1.30 லட்சமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீட்டு கடனுக்கு வட்டி மானியம் பெற வருமான உச்சவரம்பை மத்திய அரசு பாதியாக குறைத்திருக்கிறது. தற்போதைய நிலையில், பிரதமரின் வீடு கட்டும் (நகர்ப்புறம்) திட்டத்தின்கீழ், வீட்டு கடனுக்கு வட்டி மானியம் உயர் வருவாய் உடைய பணக்கார்களுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. 200 சதுர மீட்டர் பரப்பளவு (சுமார் 5 சென்ட்) கொண்ட வீடு கட்ட ரூ.18 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வீட்டு கடனில் வட்டி மானியம் அளிக்கப்பட்டு வந்தது. அதாவத
இந்நிலையில், இந்த விதிமுறையில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, 120 சதுர மீட்டர் (சுமார் 3 சென்ட் அளவு) பரப்பளவு வரையிலான வீடு கட்ட வீட்டு கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே வட்டி மானியம் அளிக்கப்பட உள்ளது. அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.9 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். அதாவது 18 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்க இனி வட்டி மானியம் கிடைக்காது.
9லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்களுக்கு வட்டி மானியம் கிடைக்கும். நகர்புறங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் வருமான உச்சவரம்பு, பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏழைகள், குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகிய தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு பலன் கிடைப்பதற்காகவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாம்.
இது ஒருஒருபுறம் எனில் நகரங்களில் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு குறைந்த வாடகையில் வீடுகளையும், பணிபுரியும் பெண்கள் விடுதிகளையும் கட்டுவதற்கு ஊக்கத்தொகை அளிக்கும் புதிய விதிமுறையையும் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
இதன்படி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடு கட்டும் நிறுவனங்கள், ஒரு படுக்கையறை (30 சதுர மீட்டர்) கொண்ட வீட்டுக்கு ரூ,1 லட்சத்து 50 ஆயிரம் வரை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து உதவித்தொகை பெற முடியும்.
இதன் மூலம், சொந்த வீடு வாங்க விரும்பாத, வாங்க இயலாத வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர்கள் குறைந்த வாடகை வீடுகளை அதிக அளவில் கட்ட முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
இந்த வீடுகளை வாடகைக்கு பதிவு செய்ய விரைவில் இணையதளம் தொடங்கப்படும் என்றும், 2 ஆண்டுகளுக்கு ஒருதடவை வாடகை தொகை மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.