ஜியோ, ஏர்டெல்லுக்கு பதில்.. பிஎஸ்என்எல் சிம் வாங்க தவம் இருக்கும் மக்கள்.. இவ்வளவு சிறப்பு திட்டங்களா?

By Keerthana

Published:

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் விலை உயர்வை அறிவித்து வரும் நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் விலை குறைவான திட்டங்களை அறிவித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதனால் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் நாட்டின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல்லைவிடவும் மிகவும் மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இதானல் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 630 பேர் புதிதாக பிஎஸ்என்எல் சேவைக்கு மாறியுள்ளனர். நாடு முழுவதும் வேகமாக பலரும் ஜியோ, ஏர்டெல்லை விட்டு வெளியேறி பிஎஸ்என்எல்க்கு மாறி வருகிறார்கள். இந்த வேகத்தில் மாறுவதற்கு காரணம், பிஎஸ்என்எல் அந்த அளவிற்கு சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

பலருமே ஒரு மாத பிளான் தான் வாங்குவார்கள் அப்படி வாஙக விரும்புவோருக்கு வெறும் ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் கால் , ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 30 நாட்களுக்கு வழங்குகிறது. அதேபோல் சேமிக்க விரும்பும் மக்களுக்காக சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. அதுதான் ரூ.249 பிளான்: அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகளுடன் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 45 நாட்களுக்கு பெற முடிகிறது. இந்த திட்டத்தின் சேர வேண்டும் என்பதற்காக பலரும் ஏர்டெல் மற்றும் ஜியோவில் இருந்து விலகி பிஎஸ்என்எல் சிம்முக்கு மாறி வருகிறார்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.107 திட்டத்தை வழங்கி வருகிறது. இதில் 200 நிமிட கால் வசதியும், 35 நாட்களுக்கான 3GB டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் ஸ்மார்ட்போன் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும். இல்லை எனக்கு அன்லிமிடெட் கால் வசதி வேண்டும் என்றால், ரூ.118 பிளான் தேர்வு செய்யலாம். இந்த ரீசார்ஜ் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 10GB டேட்டா 20 நாட்களுக்கு கிடைக்கிறது.

இல்லைப்பா, எனக்கு நாட்கள் அதிகம் வேண்டும் என்கிறீர்களா, ரூ.153 பிளான் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் 26 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் உடன், 26 GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-ஐ பெற முடியும்.

எனக்கு இண்டநெட் வசதி தினமும் 2 ஜிபி வேண்டும். அன்லிமிடெட் கால்வசதி வேண்டும், 100 இலவச எஸ்எம்எஸ் வசதி வேண்டும் என்று நினைப்போர், ரூ. 347 பிளானை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியுடன் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 54 நாட்களுக்கு கிடைக்கிறது.

இல்லைப்பா, எனக்கு 3 மாதத்திற்கு சேமிப்பு பிளான் வேண்டும் என்கிறீர்களா? ரூ. 599 பிளானை தேர்வு செய்யுங்கள். இந்த திட்டத்த்தில், உங்களுக்கு அன்லிமிடெட் கால் வசதியுடன், 100 இலவச எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை 84 நாட்களுக்குப் பெற முடியும்.

ஜியோ, ஏர்டெல்லில் இல்லாத இன்னொரு சிறப்பு திட்டம் என்றால் அது ரூ.666 பிளான் தான், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 GB டேட்டாவை 105 நாட்களுக்கு பெற முடியும். இதபோல் ரூ.699 பிளானில் அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 0.5 GB டேட்டாவை 130 நாட்களுக்கு பெறலாம்.

கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு ரீசார்ஜ் செய்யக்கூடாது என்கிறீர்களா, நீங்கள் ரூ.997 பிளானை தேர்வு செய்யுங்கள். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை 160 நாட்களுக்கு பெற முடியும். ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களா.. ரூ.1,198 பிளானை தேர்வு செய்யுங்கள். இந்த ரீசார்ஜ் மூலம் 300 நிமிட கால் வசதி மற்றும் ஒரு மாதத்திற்கு 3 GB டேட்டா என்ற விகிதத்தில் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இதேபோல் ரூ.2,399 பிளான் திட்டத்தில் சேர்ந்தால் அன்லிமிடட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, 100 SMS ஆகியவற்றை 395 நாட்களுக்கு பெற முடியும். இன்னும் பல திட்டங்கள் உள்ளன. எல்லா திட்டத்திலும் இலவச எஸ்எம்எஸ் வசதி உள்ளது.