விஜய்க்கு கூடும் கூட்டம் முட்டாள்கள் இல்லை.. தப்புக்கணக்கு போடாதீங்க.. எதற்காக விஜய் வருகிறார் என்பது மக்களுக்கு தெரியாதா? 2026 தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது.. காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது..!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்கள் ஒரு புதிய அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் என காங்கிரஸின் டேட்டா பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தலைமையில் புதிதாக உருவாகியுள்ள தமிழக…

vijay speech

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்கள் ஒரு புதிய அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் என காங்கிரஸின் டேட்டா பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தலைமையில் புதிதாக உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் கட்சியின் பலம், மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் தனது பார்வையை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் டேட்டா பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி கருத்துப்படி, நடிகர் விஜய் தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து வருகிறார். மதுரையில் நடைபெற்ற மாநாடு மற்றும் திருச்சி கூட்டம் ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில், மக்கள் மத்தியில் ஒரு புதிய தலைமைக்கான ஆர்வம் இருப்பதை மறுக்க முடியாது. ரசிகர்கள் கூட்டம் வாக்குகளாக மாறாது என்ற கருத்துக்களை அவர் நிராகரித்துள்ளார். “மக்கள் அவ்வளவு எளிதாக ஏமாற மாட்டார்கள். அவர்கள் சினிமா டிக்கெட்டுக்காக வரவில்லை, அரசியல் மாற்றத்திற்காகவே வருகிறார்கள்,” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

2026 தேர்தலுக்குப் பிறகு, அ.தி.மு.க என்ற ஒரு சக்தி இருக்காது என்று அவர் வெளிப்படையாக கூறினார். அ.தி.மு.கவின் பலம் குறைந்து, அந்த இடம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும், இதற்கு தலைமை இல்லாதது போன்ற பல காரணங்கள் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

தி.மு.க கூட்டணி வலுவாக இருந்தாலும், ஆளுங்கட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி இருப்பது இயல்பானது. என்றாலும், அது எந்த அளவுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தற்போது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை மற்றும் இடங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு 10 முதல் 12% வாக்கு வங்கி உள்ளது என்றும், அந்த கட்சி ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து பாஜகவை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் முதல் சட்டமன்றத் தேர்தல் வரை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.