உதகையில் உள்ள அந்த அரசு ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி தொடங்கியது.
3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன், கதர் துறை அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ரோஜா கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 30 அடி உயரம், 12 அடி அகலத்தில் 35 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஈபிள் டவர், 15,000 ரோஜா மலர்களை கொண்டு செல்பி பாயிண்ட், 8000 ரோஜா மலர்களால் தாய் யானையும் குட்டி யானையும் வடிவமைக்கபட்டு காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.
மேலும் சிறுவர்களை கவரும் விதமாக 3000 ரோஜாக்களால் கிரிக்கெட் பேட்டும், 1200 ரோஜாக்களால் ஆன கிரிக்கெட் பந்தும், 2000 ரோஜாக்களால் ஹாக்கி மட்டையும், 1200 ரோஜா மலர்களால் இறகு பந்து மட்டையும் வடிவமைக்கபட்டு காட்சிபடுத்தபட்டுள்ளது.
மேலும் 6000 ரோஜாக்களை கொண்டு இறகு பந்தும், 3000 ரோஜா மலர்கள் மூலம் இறகு பந்தும், கால்பந்து மற்றும் காலனி ஆகியவைகள் 3400 ரோஜா மலர்களை கொண்டு வருவாக்கபட்டுள்ளது. மேலும் ஊட்டி 200 வடிவம் 4000 ரோஜாக்களால் கொண்டும் வடிவமைக்கப்பட்டு காட்சிபடுத்தபட்டுள்ளது.