உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்து அதிமுக கூட்டணியை உறுதி செய்த நிலையில், திமுக கூட்டணி கதி கலங்கி இருப்பதாகவும், அதிமுக கூட்டணியை வலுப்படுத்த எந்த லெவலுக்கும் அமித்ஷா இறங்கி வருவார் என்று கூறப்படுவதால், தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மீண்டும் மோடி மற்றும் அமித்ஷா இருவருமே ஒரே நாளில் சென்னைக்கு வர இருப்பதாகவும், அதுவும் ரஜினியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அவரது 75வது பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாடும் விதமாக, வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் பிரமாண்டமான பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
லதா ரஜினிகாந்த் இந்த ஏற்பாட்டை நடத்திவரும் நிலையில், இந்த விழாவுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் அழைத்து இருப்பதாகவும், இருவருமே வருவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஆலோசனை சமீபத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த நிலையில், வேறு யார் யாரெல்லாம் இந்த விழாவுக்கு அழைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் முக்கிய தலைவராம எடப்பாடி பழனிசாமியை அழைக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்ல, அவரது பெயரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆக, மொத்தம் இந்த விழாவில் மோடி, அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டால், ரஜினி கண்டிப்பாக இந்த கூட்டணிக்கு ஆதரவு தருவார் அல்லது ’பாசிட்டிவ் குரல்’ கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
ரஜினியின் ஒரே ஒரு குரல் கொடுத்ததன் காரணமாக தான் 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்தது. அதேபோன்று, 30 ஆண்டுகள் கழித்து 2026 ஆம் ஆண்டு அவர் குரல் கொடுப்பாரா? பாஜக–அதிமுக கூட்டணிக்கு வெளிப்படையாக ரஜினி ஆதரவு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.