அதிமுக, திமுக கூட்டணியை டம்மியாக்க விஜய் போடும் மாஸ்டர் பிளான்.. இனி 24 மணி நேரமும் சுற்றுப்பயணம் தான்..!

  திமுக, ஒரு பக்கம் ஏற்கனவே வலுவான கூட்டணியாக இருக்க, அதிமுக தற்போது வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ்…

vijay politics

 

திமுக, ஒரு பக்கம் ஏற்கனவே வலுவான கூட்டணியாக இருக்க, அதிமுக தற்போது வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து ஒரு மெகா கூட்டணியை அமைத்து விடும் என்று தான் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி இந்த கூட்டணியில் நாம் தமிழர் கட்சியையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், நாம் தமிழர் கட்சி கூட்டணியில் இணைந்து விட்டால் திமுக – அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட சம வலிமை உள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டணிக்கு எந்த கட்சியும் இல்லாமல் தனித்து விடப்பட்டிருக்கும் விஜய், அடுத்த கட்டமாக ஒரு மாஸ்டர் பிளான் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை, உதயநிதி ஒருவர் மட்டும்தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்யும் நட்சத்திர தலைவர் என்பதும், அது கூட அதிமுகவில் இல்லை என்பதால் தான், முழுமையாக களத்தில் இறங்கி ஒரு வருடம் முழுதாக பட்டி தொட்டி எங்கும், கிராமம் எங்கும் சுற்றுப்பயணம் செய்தால் தனக்கு வெகுவாக ஆதரவு கிடைக்கும் என்று எண்ணுகிறார்.

ஒரு பக்கம் காங்கிரஸ், இன்னொரு பக்கம் பாஜக என இரண்டு வலிமையான கட்சிகளை எதிர்த்து தான் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் ஆனார் என்றும், அதேபோல் தான் தீவிரமாக பிரச்சாரம் செய்து, இரு கட்சிகளின் ஊழல்களை வெளிப்படுத்தி, இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்தால், ஒட்டுமொத்தமாக இரு கட்சிகளின் அதிருப்தி வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்றும் மாஸ்டர் ப்ளான் போட்டு இருப்பதாக தெரிகிறது.

முழுக்க முழுக்க தீவிர பிரச்சாரம் ஒன்று மட்டுமே தனது வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை புரிந்து கொண்ட விஜய், ’ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் தீவிர சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும், தேர்தல் வருவதற்குள் தமிழ்நாடு முழுவதிலும், முழுவதையும் இரண்டு அல்லது மூன்று முறை சுற்றுப்பயணம் செய்து விட வேண்டும் என்று அவர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு மெகா கூட்டணியை எதிர்த்து விஜய் போடும் மாஸ்டர் பிளான் எந்த அளவுக்கு வெற்றிக்கனியை அவருக்கு பறித்து கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.