நடிகர் விஜய் கடந்த ஆண்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கிய போது, ஊடகங்கள் அவரது கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தலைப்பு செய்திகளில் இடம் கொடுத்தன.
அதன் பிறகு, அவர் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தியபோதும், செயற்குழு, பொதுக்குழு ஆகிய நிகழ்வுகளுக்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால் தற்போது, விஜய்யின் கட்சி எந்த கூட்டணிகளிலும் இணைய வாய்ப்பு இல்லை என்ற நிலை வந்த பிறகு, ஊடகங்கள் கிட்டத்தட்ட அவரது கட்சியை மறந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம், அதிமுக – பாஜக கூட்டணி வலிமையாக இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. இந்த இரண்டு கூட்டணிகளுக்கும் எதிராக, விஜய் தனி ஆளாக மோதி வெற்றி பெற முடியுமா என்பது குறித்து சந்தேகங்கள் எழுகின்றன.
2026 தேர்தலில் விஜய் வர வாய்ப்பில்லை என்றும், அவரால் வெற்றி பெற முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்த பூத் கமிட்டி மீட்டிங் குறித்த செய்திகள் கூட ஊடகங்களில் பெரிய அளவில் வெளியானதில்லை. இது சோஷியல் மீடியாவில் மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் சோஷியல் மீடியாவை வைத்துக்கொண்டு ஓட்டுகள் வாங்க முடியுமா? வெற்றி பெற முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஆனால், விஜய் வேறு ஏதாவது திட்டம் வைத்திருப்பார் என்றும், தேர்தல் நெருங்கியவுடன் அவரது அதிரடி ஆட்டம் இருக்கும் என்றும், அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், இன்றைய நிலையை பார்க்கும்போது, விஜய்யை கிட்டத்தட்ட ஊடகங்கள் மறந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.