அண்மைக் காலமாகத் தமிழக அரசியல் களம் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தலைவர்களின் விமர்சனங்கள், ஊடகங்களின் நிலைப்பாடு என பல்வேறு தளங்களில் சூடுபிடித்துள்ளது.
தி.மு.க. கூட்டணிக்குள் சில சிக்கல்கள் இருந்தாலும், அதை வெளிப்படையாக கூட்டணியில் உள்ள கட்சிகள் காட்டி கொள்வதில்லை. இது ஒரு நல்ல அரசியல் தந்திரம். அதே சமயம், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்குள் நடக்கும் விவாதங்கள் அனைத்தும் வெளிப்படையாகவே பேசப்படுகின்றன என்பது அந்த கூட்டணிக்கு ஒரு பலவீனமாக பார்க்கப்படுகிறது,.
மேலும், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள், வரும் தேர்தலில் கூடுதல் இடங்களை எதிர்பார்ப்பதாக கூறி வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 இடங்களை எதிர்பார்க்கலாம் என்றும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க கூடுதல் இடங்களைக் கோரலாம் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை, தமிழகத்தில் தங்கள் பலத்தை மீண்டும் நிரூபிக்க விரும்புகிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ஒருவர், 117 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியின் பெரிய எதிர்பார்ப்பு என்றாலும், கடந்த காலத்தில் தி.மு.க.வும் காங்கிரஸும் சரிபாதி தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. இந்த நிலை மீண்டும் வர வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ், ‘அதிகமான சீட்டுகளை மட்டுமல்ல, ஆட்சியிலும் பங்கு கேட்போம்’ என்று கூறியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆனால் திமுக கூட்டணியில் உள்ள இந்த சலசலப்பை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. அங்கிருக்கும் பிரச்சனைகளை ஒரு செய்தியாக கூட பதிவு செய்வதில்லை. ஆனால் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பிரச்சனைகளை மட்டுமே ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. தி.மு.க. கூட்டணிக்குள் உள்ள பிரச்சனைகளை மூடி மறைப்பதை பொதுமக்களே கண்டுபிடித்துள்ளனர். எனவே பெரும்பாலான மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன. இதனால் தான் சமூக வலைதளங்கள் மக்களிடையே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மத்தியில் பா.ஜ.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளை ஒதுக்குகிறது. “2014 மற்றும் 2019-ல் தனிப்பெரும்பான்மை பெற்றபோதும், பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு கொடுத்தது. இது பா.ஜ.க.வின் பெருந்தன்மை. ஆனால், தமிழகத்தில் தி.மு.க. மெஜாரிட்டி இல்லாமல், மைனாரிட்டியில் ஆட்சி அமைந்தால் கூட, கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில்லை. கூட்டணி கட்சிகளும் அரசில் பங்கு வேண்டும் என்று கேட்க தயங்கி வந்தன. ஆனால் இனிமேல் அந்த தயக்கம், பயம் இருக்காது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆட்சியில் பங்கு கேட்கும், அதை ஊடகங்கள் மறைத்தாலும், சமூக ஊடகங்கள் மூலம் அந்த செய்திகள் மக்களுக்கு சென்றுவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
