isha

பிரியாணி கடைகளில் வரி ஏய்ப்பு!. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?..

இந்தியாவில் பெரும்பாலானோருக்கு பிடித்த மதிய உணவாக பிரியாணி மாறியிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு, ஹைதராபாத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ள பல வட மாநிலங்களிலும் மதிய உணவாக பலரும் பிரிணியை தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறார்கள். அதற்கு…

biriyani

இந்தியாவில் பெரும்பாலானோருக்கு பிடித்த மதிய உணவாக பிரியாணி மாறியிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு, ஹைதராபாத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ள பல வட மாநிலங்களிலும் மதிய உணவாக பலரும் பிரிணியை தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் அதன் சுவைதான். இந்தியாவில் உள்ள எல்லா குக்கிராமங்களிலும் தற்போது நிறைய பிரியாணி கடைகள் வந்துவிட்டது. 70 முதல் 300 250 ரூபாய் வரை பிரியாணி கிடைக்கிறது.

சின்ன நகரங்களில் பிரியாணி 80 முதல் 100 வரை கிடைக்கிறது.. சென்னை போன்ற பெரிய நகரங்களில் தெருவோரக்கடைகளில் 100 ரூபாய்க்கும் பெரிய கடைகளில் 250 ரூபாய் வரைக்கும் கூட சிக்கன் பிரியாணி விற்கப்படுகிறது. கடைக்கு சென்று பிரியாணி சாப்பிட முடியாதவர்கள் Swiggy, Uber, Zaaroz போன்ற மொபைல் ஆப்கள் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள்..

இந்நிலையில், இந்தியாவில் உள்ள பிரியாணி கடைகளில் 70 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 100 மற்றும் அதற்கு குறைவாக பிரியாணி விற்பனை செய்யும் பல கடைகளில் பில் கொடுப்பதில்லை. அதிலும் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற 5 மாநிலங்களில்தான் அதிக அளவு வரி ஏய்ப்பு நடந்திருப்பது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 1200 கோடி அளவுக்கும், கர்நாடகாவில் 2000 கோடி அளவுக்கும், தெலுங்கானாவில் 1500 கோடி வரைக்கும் கூட வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது..