விஜய் பக்கம் உள்ள தவறுகள் என்ன? அரசு பக்கம் இருந்த தவறுகள் என்ன? புட்டு புட்டு வைத்த அண்ணாமலை.. மக்களே இனி அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்.. நம் உயிரை நாம் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.. கரூர் சம்பவம் கடைசியாக இருக்கட்டும்..!

கரூர் துயர சம்பவத்தின் அடிப்படையில் விஜய்க்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூக வலைத்தள பதிவுகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக விஜய்யின் கட்சியை கலைக்க வேண்டும் என்றும், அவர் இனி பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும்…

annamalai 1

கரூர் துயர சம்பவத்தின் அடிப்படையில் விஜய்க்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூக வலைத்தள பதிவுகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக விஜய்யின் கட்சியை கலைக்க வேண்டும் என்றும், அவர் இனி பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணைக்குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் சில முக்கிய விஷயங்கள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிரச்சனை குறித்து மிகவும் தெளிவான கருத்தை வெளியிட்ட அரசியல்வாதி அண்ணாமலை ஒருவர் தான். அவர் இந்த விவகாரத்தில் விஜய் பக்கம் இருந்த தவறுகள் மற்றும் அரசின் தோல்வி, காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அவர் விமர்சித்தார்.

அண்ணாமலை கூறிய முதல் விஷயம் “நாம் நன்கு படித்த, முன்னேறிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். இளைஞர்கள் ஒரு நடிகருக்காக 100 பைக்கில் செல்வது நல்லதல்ல. உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நீங்கள் உணர்ந்தால், தயவு செய்து அந்த கூட்டத்திற்கு போகாதீர்கள். அந்த கூட்டம் உங்களை கொன்றுவிடும் அபாயம் உள்ளது என எச்சரித்தார்.

அதேபோல், “ஏன் பொறுப்பு டிஜிபி-யைப் போட்டீர்கள்? ஒரு முழு நேர டிஜிபி-யை ஏன் போடவில்லை? ஒரு டிஜிபி-யை நியமித்து, கூட்டத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த உளவுத்துறை அறிக்கையை நொடிக்கு நொடி சேகரித்திருக்கலாமே?” என்று கேள்வியையும் எழுப்பினார்.

10,000 பேருக்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்தீர்கள். ஆனால், கிட்டத்தட்ட 27,000 பேர் வந்திருந்தனர். கூட்டம் சேர ஆரம்பித்துவிட்டதாக காவல்துறை சொன்னது. ஆனால், ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை? உளவுத்துறை அறிக்கைகள் அவ்வப்போது அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கூட்டம் எப்படி வந்தது, எப்போது வந்தது என்பதைக்கூட கையாள தெரியாத ஒரு அரசாங்கம்தான் இப்போது ஆட்சியில் உள்ளது” என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

கரூரில் விஜய் வந்ததுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றால், இந்திய விமானப்படை நடத்திய விமான கண்காட்சியில் ஏன் ஐந்து பேர் இறந்தனர்? என்ற கேள்வியையும் அண்ணாமலை எழுப்பினார். இது கூட்டத்தை கையாள தெரியாத அரசின் தோல்வி என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் விஜய் பக்கம் இருந்த தவறுகளையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார். தனது பயண திட்டங்களை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், கூட்டத்தை வார இறுதி நாட்களில் மட்டும் நடத்தாமல், வார நாட்களிலும் நடத்தினால் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் குறையும் என்றும் கூறினார்.

மேலும் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நம்பர் பிளேட் இல்லாத ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்தில் சுற்றி வந்ததாகவும் சிலர் தெரிவித்தனர். இதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் அரசியலாக பார்க்கப்படுகிறது என்பது தான் பலரது குற்றச்சாட்டுகளாக உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நபர், “நாங்கள் விஜய்யை தலைவராக பார்க்கவில்லை” என்று பேசியிருக்கிறார். ஆனால் அந்த நபர் யார் என்று ஆராய்ந்தபோது, அவர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பது புகைப்படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. இது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மொத்தத்தில் விசாரணை ஆணையம் முழுமையாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்த பிறகே உண்மை என்ன என்று தெரிய வரும். அப்படியே உண்மை தெரிந்தாலும், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் போல் அறிக்கை பெற்ற பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் தான் சுதாரிக்க வேண்டும். அரசியல்வாதிகள் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்வார்கள், மக்கள் அரசையோ, அரசியல் கட்சி தலைவர்களையோ நம்பாமல் நம்முடைய உயிரை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொள்ள வேண்டும். கரூர் துயர சம்பவம் கடைசியாக இருக்கட்டும்.