ஒரு லட்சம் சேர் போட்டும், ஒன்றரை லட்சம் பேர் வெளியில நின்னாங்க… கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? பெய்டு புரமொஷனர்கள் சிக்கிய தரமான சம்பவம்.. காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வீங்களா? 10000 ரூபாய்க்கு மானத்தை விக்குறீங்களே..!

சமீபத்தில் கரூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா, ஒருபுறம் பிரமாண்டமான வெற்றியாக கொண்டாடப்பட்டாலும், மறுபுறம், அது தொடர்பான சில சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, விழா குறித்த ஒரே மாதிரியான…

dmk

சமீபத்தில் கரூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா, ஒருபுறம் பிரமாண்டமான வெற்றியாக கொண்டாடப்பட்டாலும், மறுபுறம், அது தொடர்பான சில சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, விழா குறித்த ஒரே மாதிரியான தகவல்களை பல்வேறு சமூக ஊடகப் பிரபலங்கள் பேசியது, ‘பணம் கொடுத்து விளம்பரம் செய்யப்படுகிறதா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

கரூரில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில், “ஒரு லட்சம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன, ஆனால் அவற்றை நிரப்ப முடியாமல், ஒன்றரை லட்சம் பேர் வெளியே நின்றுகொண்டிருந்தனர்” என்று பல சமூக ஊடக பிரபலங்கள் ஒரே மாதிரியான வசனங்களை அச்சு பிசகாமல் பேசியது பெரும் பேசுபொருளாகியுள்ளது. பொதுவாக, ஒரு நிகழ்வு குறித்து பலரும் பேசும்போது, அதன் கருத்து வேறுபடுவது இயல்பு. ஆனால், ஒரே மாதிரியான வசனங்கள், வார்த்தைகள், மற்றும் தரவுகள் பயன்படுத்தப்பட்டது, இது ஒரு திட்டமிட்ட விளம்பர யுக்தி என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

ஒரு லட்சம் நாற்காலிகள், ஒன்றரை லட்சம் பேர் வெளியே என பேசப்பட்ட இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இது ஒரு “மெகா உருட்டு” என சில விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த விழாவில் பல சேர்கள் காலியாக இருந்த காணொளியும் வைரலாகிரது. ஆனால், இந்த ஒரே மாதிரியான பதிவுகள், ஒரு பெரிய தொகையை செலவழித்து இந்த விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது என்ற கருத்தை வலுப்படுத்துகின்றன.

திமுகவின் ஆட்சி குறித்து விவாதிக்கப்படும் மற்றொரு விஷயம், டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதுதான். இது குறித்து அமைச்சர் முத்துசாமி அளித்த விளக்கம், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

https://x.com/itisprashanth/status/1968958459308593349