விஜய் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்தால், ஒட்டுமொத்த திரையுலகமும் இந்த கூட்டணிக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் நேரடியாகவே இந்த கூட்டணிக்கு குரல் கொடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
வரும் ஜூலை மாதம் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக திமுக தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சீட்டை பெற்றவுடன் சில அதிரடி நடவடிக்கைகளை கமல்ஹாசன் எடுப்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால், இது எல்லாம் அரசியல் விமர்சகர்களின் யூகமாகவே இருக்கும் நிலையில், உண்மையாகவே விஜய் மற்றும் கமல்ஹாசன் இணைந்து 2026 தேர்தலை சந்திப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.