என்னப்பா சொல்றீங்க! பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியா?

By Staff

Published:

வரும் 2024-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

குறிப்பாக தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் 2024 தேர்தலுக்கு இப்போதே தயராகி வருகின்றன. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ராகுல் காந்தி நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

பாஜகவை பொறுத்தவரை 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

தற்போது 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியிலும் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் தொகுதியிலும் அவர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம் ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தில் சிறப்பு வாய்ந்த தொகுதியாக உள்ளதால் இதனை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு தொகுதியிலும் வெற்றிப் பெற்றால் அவர் வாராணாசி தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு ராமநாதபுரம் தொகுதியை தக்க வைத்துக் கொள்வார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த தகவல்கள் உறுதிப்படுத்தபடாத தகவல்களாகவே உள்ளது.

தமிழகத்தில் இன்னும் பாஜக வளர்ந்து வரும் கட்சியாகவே உள்ளது. ஒருவேளை தமிழகத்தில் பாஜக சார்பில் பிரதமர் மோடி நின்றால் அது தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.