நடிகர் விஜய்யை சீண்டி பார்க்கும் பிரபல இசையமைப்பாளர்! வைரல் பதிவு!

Published:

நடிகர் விஜய் தற்போழுது நடித்து வரும் திரைப்படம் வாரிசு, இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் பொங்கலுக்கு வெளியாக உள்ளது, ரசிகர்கள் இந்த படத்தின் மீது அதிக ஆர்வத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கத்தில் சில நாட்கள் முன் விமர்சையாக நடந்தது. அதில் விஜய் கலந்து கொண்டு ரசிகர்களை தனது பாடல்கள் மூலமும் குட்டி ஸ்டோரி மூலமும் மகிழ்வித்துள்ளார்.

விஜய்யின் பேச்சுக்கு ரசிகர்களும் ஆரவாரமாக கொண்டாடி வந்தனர், இது எல்லாம் ஒரு புறம் இருக்க இந்த நிகழ்ச்சியின் போது விஜய் அவர்களின் நடை உடை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி , தாடியை கொஞ்சம் நெறிப்படுத்தி இந்த பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்ப உடையணிந்திருக்கலாம் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவும் ,கிரிக்கெட்வும் உயிர் மூச்சாகியுள்ள இந்தியாவில் இந்த துறையை சார்ந்தவர் அவர்களுக்கு என தனி பொறுப்பு உள்ளது. நட்ஷத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்ட வெளிச்சம் தானே , யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் தன நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்ப்பவன் உங்கள் ரசிகர்கள்.

இன்றைய தங்கம் விலை (03-01-2023): 42 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள் , விடுமுறைகளில் நன்கு மனம் போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறைகளை உங்களை கண்முடித்தனமாக பின்பற்றும் ரசிகர்களுக்கும் கற்று கொடுக்கும் படி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

 

மேலும் உங்களுக்காக...