தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தற்போது கோடை காலம் என்பதால் வெயில் அதிகமாக அடித்து வருகிறது என்பதும் பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை வெயிலின் கொடுமையை போக்க அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் இந்த கோடை மழை குளிர்ச்சியான தட்பவெப்பத்தை மாற்றி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மழை வாய்ப்பு குறித்து அவ்வப்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் வெளியேற்றுள்ள அறிவிப்பில் இன்று 24 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இன்னும் சிலமணி நேரங்களில் மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் இருந்தாலும் ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் வெயில் அடித்து வெப்பமான சூழல் மாறிவிடுகிறது என்றும் எனவே பொதுமக்கள் அவசியம் இருந்தால் மட்டும் வெளியே வரவேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நீர் சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் குறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.