ரூ.1500 கோடி மதிப்புள்ள 22 மாடி கட்டிடத்தை பரிசாக கொடுத்த அம்பானி.. எதற்கு தெரியுமா?

Published:

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி 1500 கோடி மதிப்புள்ள 22 மாடி கட்டிடத்தை மனோஜ் மோடி என்பவருக்கு பரிசாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மும்பையில் மிக முக்கிய பகுதியான நேபியன் கடல் என்ற சாலையில் அமைந்துள்ள 22 மாடி கட்டிடத்தை மனோஜ் மோடிக்கு முகேஷ் அம்பானி பரிசாக கொடுத்துள்ளார். பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் இந்த கட்டிடத்தின் சொத்து மதிப்பு 1500 கோடி என்றும் 22 மாடிகளை கொண்டுள்ள இந்த கட்டிடத்தில் 7 கார் பார்க்கிங் மற்றும் 1.7 லட்சம் சதுர அடி பரப்பளவு உள்ளது என்றும் ஒவ்வொரு தளமும் 8000 சதுர அடி பரப்பளவு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

மிகவும் ஆடம்பரமான இந்த கட்டிடத்தில் உள்ள தளவாடங்கள் இத்தாலியிலிருந்து பெறப்பட்டது என்றும் வீட்டின் வடிவமைப்பாளர்கள் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்தினர் என்றும் கூறப்படுகிறது

manoj modi

இந்த கட்டிடத்தை மனோஜ் மோடிக்கு முகேஷ் அம்பானி ஏன் கொடுத்தார் என்ற காரணமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1500 கோடி கட்டிடத்தை பரிசாக பெற்ற இந்த மனோஜ் மோடி யார் என்பதை தற்போது பார்ப்போம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியின் வலது கரமாக மனோஜ் மோடி அறியப்படுகிறார்.

முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானியிடம் 1980 களின் முற்பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மனோஜ் மோடி வேலைக்கு சேர்ந்தார்.

மனோஜ் மோடியும் முகேஷ் அம்பானியும் மும்பையில் வேதியியல் தொழில்நுட்பத் துறையில் கல்லூரி நாட்களில் இருந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

ரிலையன்ஸ் மூலம் பல பில்லியன் டாலர் ஒப்பந்தங்களுக்கு பின்னால் இருந்தவர் இவர் தான் என கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேஸ்புக்குடன் ஜியோவின் 43,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை முன்னெடுத்தவர் மனோஜ் மோடி என்று கூறப்படுகிறது.

மனோஜ் மோடி வெளிச்சத்திலிருந்து விலகி இருக்க விரும்புகிறார், மேலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அல்லது நிகர மதிப்பு பற்றி அதிகம் அறியப்படவில்லை.

மேலும் உங்களுக்காக...